சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : செப் 17, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'இப்படியே, மாறி, மாறி பட்டியலிட வேண்டியது தான். சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடுங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசியச் செயலர் எச்.ராஜா பேட்டி: காங்கிரசை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், ஹிந்துக்களுக்கு எதிராக எவ்வாறு எல்லாம் செயல்படுகிறார் என்பதை என்னால் பட்டியலிட முடியும். காங்கிரஸ் தலைவர்களுக்கு, என்னைப் பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது.

'அப்போ, உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும், தி.மு.க.,வில் சுதந்திரம் இல்லை என்கிறீர்களா...' என, கிடுக்கிப்பிடி போடத் துாண்டும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி: காங்கிரஸ் போன்ற அதீத சுதந்திரம் உடைய கட்சியில், மாற்றுக் கருத்துகளை கொண்டோர் இருக்கத் தான் செய்வர். அவை, கடிதங்களாக, விவாதங்களாக இருக்க வேண்டும்; பொதுவெளியில் வேண்டாம் என்பது தான் என் கருத்து.

'இவர்களின் பிரசாரத்தை புறம் தள்ளி, நீட் தேர்வை அதிக எண்ணிக்கையில், தமிழக மாணவர்கள் தான் எழுதியுள்ளனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராஹிம் பேட்டி: 'நீட்' தேர்வு பற்றி பொய்யான விமர்சனங்களை சொல்லி வரும், தி.மு.க.,வுக்கு, 'நீட் தேர்வு எளிமையாக இருந்தது' என, மாணவர்களே பதிலடி கொடுத்துள்ளனர். மாணவர்களின் கல்வித் திறனை செம்மைபடுத்தாமல், ஊனப்படுத்தும் செயலை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செய்து வருகிறார்.

'உங்களைப் போன்ற கட்சித் தலைவர்களுக்குத் தான், முதலில், 'டெஸ்ட்' வைக்க வேண்டும்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: விபரம் தெரியாத குழந்தைகளுக்கு எல்லாம் பொதுத் தேர்வுகளை வைக்கும் போது எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள், அமைச்சர்கள், பிரதமர் மோடிக்கு, பொதுத் தேர்வு வைத்து, தேர்ச்சி பெறுவோருக்குத் தான் பதவி என சொல்ல வேண்டும்.

'பலரும் வலியுறுத்தி விட்டனர்; அரசு கண்டுகொள்ளவில்லை. உங்களுக்கும் அதே பதில் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: தமிழகத்தில், 12 ஆயிரம் பேர், நீண்ட காலமாக, பகுதி நேர ஆசிரியர்களாக, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்.

'இதெல்லாம் தந்தது, படித்து, வேலைக்கு போகத் தானே தவிர, உங்கள் கட்சியில் சேர்வதற்கா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: கல்வி உதவித் தொகை, இலவச பஸ் பாஸ், தொலைக்காட்சி பெட்டி, லேப்டாப் கம்ப்யூட்டர் தந்து, தமிழர்களை, 'இஸ்ரோ'விலும், சிலிக்கான் வேலியிலும் பணியில் அமர்த்திய, தி.மு.க.,வில் உறுப்பினராக இணைய அழைக்கிறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X