கஞ்சா விற்றவர் கைது

Added : செப் 17, 2020
Share
Advertisement

சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, கே.வி.ஆர்., நகரில், போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம், 45 என்பவர், ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிய வர, அவரை கைது செய்து, கஞ்சா பறிமுதல் செய்தனர். இவர் மீது, ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது.தொழிலாளி தற்கொலைஅவிநாசி, ராக்கியபாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார், 35; பனியன் தொழிலாளி. திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளன. நேற்று, வீட்டில், துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 'போதிய வருமானமின்றி சிரமப்பட்டு வந்ததாகவும், சுய உதவி குழுக்களிடம் பெற்ற கடனை திரும்பி செலுத்த முடியாமல் இருந்ததால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்' என, போலீசார் கூறினார்.பெண் சடலம் மீட்புரூரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அமராவதி நகர் பி.ஏ.பி., கிளை வாய்க்காலில் பெண் சடலம் மிதந்து வருவதாக போலீசாருக்கு, தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், 45 வயது மதிக்க பெண்ணின் சடலத்தை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X