பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை -- சென்னை வழித்தடத்தில் 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள்

Added : செப் 18, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை:மதுரை சென்னை வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.தற்போது இந்த வழித்தடத்தில் வைகை, பாண்டியன் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. மதுரையில் காலை 7:00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மதியம் 2.35 சென்னை செல்கிறது. மறுமார்க்கத்தில் அங்கிருந்து மதியம் 1:40 க்கு புறப்பட்டு மதுரைக்கு

மதுரை:மதுரை சென்னை வழித்தடத்தில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது இந்த வழித்தடத்தில் வைகை, பாண்டியன் உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. மதுரையில் காலை 7:00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மதியம் 2.35 சென்னை செல்கிறது. மறுமார்க்கத்தில் அங்கிருந்து மதியம் 1:40 க்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9:15 க்கு வருகிறது.

இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என தென் மாவட்ட பயணியர் நீண்டகாலமாக வலியுறுத்தினர். அதன் எதிரொலியாக ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ஏதுவாக ரயில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டன. தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரனும் இந்த வழித்தடத்தை ஆய்வு செய்து சில ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி ரயில்வே பொறியாளர்கள் வழித்தடத்தை செம்மைப்படுத்தினர். இனி ரயில்களை மணிக்கு 110 கி.மீ.,வேகத்தில் இயக்கலாம் என இன்ஜின் டிரைவர்கள், உதவி டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். மதுரை-சென்னை பயணத்தில் ஒரு மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-செப்-202020:55:04 IST Report Abuse
Bhaskaran நெல்லையிலிருந்து சென்னைக்கு பகல் நேர வண்டி விடணும் .நம் எம்.பி கல் ஒன்றும் செய்யமாட்டார்கள் வர்த்தக சங்கங்கள் ,தினமலர் முயற்சி செய்தால் மட்டுமே சாத்தியம்
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
18-செப்-202012:24:54 IST Report Abuse
mupaco வைகை ரயிலை நெல்லை வரை நீடிக்கலாம்.
Rate this:
Cancel
SENTHIL - Bengaluru,இந்தியா
18-செப்-202008:22:11 IST Report Abuse
SENTHIL கேரளாவில் லைட் ஹை ஸ்பீட் ரயிலை ( திருவனந்தபுரம் - கோழிக்கோடு ) இயக்குவதற்கு எல்லாம் அரசியல்வாதிகளும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள். நாம் எங்கே உள்ளோம் ? சுய பரிசோதனை செய்ய வேண்டிய தருணம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X