உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவில் சுதந்திரம் இல்லையா

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
காங்கிரஸ் போன்ற அதீத சுதந்திரம் உடைய கட்சியில், மாற்றுக் கருத்துகளை கொண்டோர் இருக்கத் தான் செய்வர். அவை, கடிதங்களாக, விவாதங்களாக இருக்க வேண்டும்; பொதுவெளியில் வேண்டாம் என்பது தான் என் கருத்து.- அழகிரி 'அப்போ, உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும், தி.மு.க.,வில் சுதந்திரம் இல்லை என்கிறீர்களா...' என, கிடுக்கிப்பிடி போடத் துாண்டும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி
CONGRESS, BJP, DMK, ALAGIRI, H.RAJA, SEEMAN, THIRUMAVALAVAN, UDAYANITHISTALIN, UDAYANIDHI, காங்கிரஸ், பாஜ, திமுக, அழகிரி, விடுதலைசிறுத்தைகள், திருமாவளவன், உதயநிதி, உதயநிதிஸ்டாலின்,

காங்கிரஸ் போன்ற அதீத சுதந்திரம் உடைய கட்சியில், மாற்றுக் கருத்துகளை கொண்டோர் இருக்கத் தான் செய்வர். அவை, கடிதங்களாக, விவாதங்களாக இருக்க வேண்டும்; பொதுவெளியில் வேண்டாம் என்பது தான் என் கருத்து.- அழகிரி


'அப்போ, உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும், தி.மு.க.,வில் சுதந்திரம் இல்லை என்கிறீர்களா...' என, கிடுக்கிப்பிடி போடத் துாண்டும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி



காங்கிரசை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், ஹிந்துக்களுக்கு எதிராக எவ்வாறு எல்லாம் செயல்படுகிறார் என்பதை என்னால் பட்டியலிட முடியும். காங்கிரஸ் தலைவர்களுக்கு, என்னைப் பற்றி பேச எந்த உரிமையும் கிடையாது.- எச்.ராஜா


latest tamil news



'இப்படியே, மாறி, மாறி பட்டியலிட வேண்டியது தான். சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடுங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசியச் செயலர் எச்.ராஜா பேட்டி



'நீட்' தேர்வு பற்றி பொய்யான விமர்சனங்களை சொல்லி வரும், தி.மு.க.,வுக்கு, 'நீட் தேர்வு எளிமையாக இருந்தது' என, மாணவர்களே பதிலடி கொடுத்துள்ளனர். மாணவர்களின் கல்வித் திறனை செம்மைபடுத்தாமல், ஊனப்படுத்தும் செயலை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் செய்து வருகிறார்.- இப்ராஹிம்


'இவர்களின் பிரசாரத்தை புறம் தள்ளி, நீட் தேர்வை அதிக எண்ணிக்கையில், தமிழக மாணவர்கள் தான் எழுதியுள்ளனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராஹிம் பேட்டி



விபரம் தெரியாத குழந்தைகளுக்கு எல்லாம் பொதுத் தேர்வுகளை வைக்கும் போது எம்.எல்.ஏ.,க்கள் - எம்.பி.,க்கள், அமைச்சர்கள், பிரதமர் மோடிக்கு, பொதுத் தேர்வு வைத்து, தேர்ச்சி பெறுவோருக்குத் தான் பதவி என சொல்ல வேண்டும்.- சீமான்


'உங்களைப் போன்ற கட்சித் தலைவர்களுக்குத் தான், முதலில், 'டெஸ்ட்' வைக்க வேண்டும்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு:


தமிழகத்தில், 12 ஆயிரம் பேர், நீண்ட காலமாக, பகுதி நேர ஆசிரியர்களாக, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்து, கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்.- திருமாவளவன்


'பலரும் வலியுறுத்தி விட்டனர்; அரசு கண்டுகொள்ளவில்லை. உங்களுக்கும் அதே பதில் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை



கல்வி உதவித் தொகை, இலவச பஸ் பாஸ், தொலைக்காட்சி பெட்டி, லேப்டாப் கம்ப்யூட்டர் தந்து, தமிழர்களை, 'இஸ்ரோ'விலும், சிலிக்கான் வேலியிலும் பணியில் அமர்த்திய, தி.மு.க.,வில் உறுப்பினராக இணைய அழைக்கிறேன்.- உதயநிதி ஸ்டாலின்


'இதெல்லாம் தந்தது, படித்து, வேலைக்கு போகத் தானே தவிர, உங்கள் கட்சியில் சேர்வதற்கா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-செப்-202011:16:02 IST Report Abuse
Malick Raja திமுகவை விரட்டியடிப்பவர்கள் கூடிய விரைவில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்படலாம் .. அந்த அளவில் மனநல பாதிப்பு ஏற்பட்டு விட்டது . கூடுதலாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் கீழ்பாக்கம் போதுமாதாகிவிடும்
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
18-செப்-202019:00:07 IST Report Abuse
சோணகிரி தீயமுகவிற்கும் இஸ்ரோவிற்கும் ஆயிரம் ஒளிவருடங்கள் தூரம்...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
19-செப்-202011:17:49 IST Report Abuse
madhavan rajanஅந்த இலவசங்கள் வாங்கி படித்தவர்கள் அவ்வளவு திறமைசாலிகள் என்றால் திமுக நீட் தேர்வை எதிர்ப்பது மோசடிதானே? இவர் கூற்றுப்படி அரசு பள்ளியில் படித்தவர்கள் அனைவரும் நல்ல வேலையில் இருக்கிறார்கள் போல. அப்படியென்றால் இவர்கள் உறவினர்கள் எதற்கு CBSE மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நடத்துகிறார்கள். அதிலும் மோசடி வெளிப்படுகிறது. அரசுப் பள்ளியில் படிக்காதவர்கள் எல்லாம் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்களோ?...
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
18-செப்-202017:45:38 IST Report Abuse
சோணகிரி திருட்டு முன்னேற்றக்கழகத்தை விரட்டியடிப்போம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X