பொது செய்தி

தமிழ்நாடு

தொற்றுள்ளவர் மருத்துவமனை செல்ல அடம்பிடிக்காதீங்க: சுகாதார துறையினருக்கு புதிய சிக்கல்

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
திருப்பூர்: 'கொரோனா தொற்று உறுதியானவர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வது பெரும் சவாலாக மாறி வருகிறது' என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.திருப்பூரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாலுகா, வட்டார அளவில், பரிசோதனை முகாம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது; தினமும்,
தொற்றுள்ளவர், மருத்துவமனை, அடம்பிடிக்காதீங்க, சுகாதாரதுறை, புதியசிக்கல்

திருப்பூர்: 'கொரோனா தொற்று உறுதியானவர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வது பெரும் சவாலாக மாறி வருகிறது' என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாலுகா, வட்டார அளவில், பரிசோதனை முகாம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது; தினமும், 2,000க்கும் மேற்பட்டோருக்கு, சளி மாதிரி பரிசோதிக்கப்படுகிறது. அதே நேரம், தொற்று உறுதியானவர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, சுகாதார துறையினருக்கு, பெரும் சவாலாக மாறி வருகிறது.


latest tamil news



சுகாதார துறையினர் கூறியதாவது;கோவிட், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்ளவே விரும்புகின்றனர். இது, ஏற்புடையது தான் என்றாலும், டாக்டர் அறிவுரை, பரிந்துரையின்றி, தனி அறை உள்ளிட்ட வசதி இல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளக்கூடாது. டாக்டர்கள் பரிந்துரைத்தாலும், அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர்களால், தனிமையில் உள்ள நோயாளிகள் கண்காணிக்கப்படுவர்.வீட்டில், போதிய வசதி இருக்க வேண்டும். அவர்களை, 24 மணி நேரமும் கவனித்து கொள்ள உதவியாளர் இருக்க வேண்டும்.

இதுபோன்ற எந்தவொரு வசதியும் இல்லாத நிலையில், நோயாளிகள் வீட்டிற்குள் இருந்தால், தொற்று பரவல் அதிகரிக்கும். அவர்களின் தனிமை காலம் முடியும் வரை, கண்காணிப்பதிலும் சிரமம் ஏற்படும்.தங்கள் வீடுகளில், தனிமைப்படுத்துதலுக்கான வசதி இல்லாதவர்கள், 'கோவிட் கேர்' சென்டர்களில், தனிமை காலத்தை முழுமையாக முடித்து கொண்டு, வீடு திரும்பினால் நோய் பரவல் கட்டுக்குள் இருக்கும். அதேநேரம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோயுடன் இருந்து, தொற்று பாதிப்புக்கு உள்ளாகுவோர், தாமாகவே, மருத்துவமனைக்கு செல்ல முன் வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
18-செப்-202018:04:56 IST Report Abuse
venkatan அதுதான் காந்திஜி காலத்தில் பிளேக் பரவியபோது ஒதுக்குப்புறமாக எல்லா வசதிகளுடன் திறந்த வெளியில் டெண்டுகள் அமைக்கப்பட்டன.. ஜோகன்னஸ்பெர்க்கில்..அண்ணலின் சத்தியசோதனையில் தகவல் பதிவு செய்திருக்கிறார்.ராம்... ராம்..
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
18-செப்-202017:54:17 IST Report Abuse
S. Narayanan அரசு மருத்துவ மனைகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. உணவு தண்ணீர் கழிப்பறை வசதிகள் இல்லாததால்தான் மக்கள் வர தயங்குகிறார்கள்.
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
18-செப்-202017:12:58 IST Report Abuse
Somiah M பொதுவாக அரசு மருத்துவ மனைகளில் சிறந்த மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர் .உண்மைதான் .அனால் அங்குள்ள சுற்றுப்புற சூழ்நிலைகள் மிக மிக மோசமாக உள்ளன .அந்த சூழ்நிலையில் மருத்துவ வசதியை பெற்றுக்கொள்ள எவரும் விரும்புவதில்லை .இதுதான் யதார்த்தம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X