அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியல்ல': ஏகத்துவ ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் பேட்டி

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (27)
Share
Advertisement
திண்டுக்கல்: 'பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியல்ல' என, திண்டுக்கல்லில் ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராஹிம் கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியது: மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை பிரசார யாத்திரை மேற்கொண்டுள்ளோம். மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., காங்., கட்சியினரின் பொய் பிரசாரத்தை முறியடிப்பதே எங்கள் நோக்கம். 'நீட்' தேர்வுக்கு
'பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியல்ல': ஏகத்துவ ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் பேட்டி

திண்டுக்கல்: 'பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியல்ல' என, திண்டுக்கல்லில் ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராஹிம் கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறியது: மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை பிரசார யாத்திரை மேற்கொண்டுள்ளோம். மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., காங்., கட்சியினரின் பொய் பிரசாரத்தை முறியடிப்பதே எங்கள் நோக்கம். 'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க., அவதுாறு பிரசாரம் செய்கிறது. இத்தேர்வு மாணவர்களுக்கு எதிரானது போன்று எதிர்கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.,வின் உட்கட்சி தேர்தலில் திட்டமிட்டு இஸ்லாமியர்களை புறக்கணித்துள்ளனர்.


latest tamil news


பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி போலவும், தி.மு.க., தான் முஸ்லிம்களை காப்பாற்றும் என்பது போன்றும் பொய் பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். மொழி அறிவை மேம்படுத்த மத்திய அரசு ஹிந்தியை மூன்றாவது மொழியாக கற்க வாய்ப்பளிக்கிறது. ஆனால், ஹிந்தியை திணிப்பதாக தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஹிந்தி பேசும் மாநிலங்களில் தமிழை மூன்றாம் மொழியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-செப்-202011:22:08 IST Report Abuse
Malick Raja இவரை இவரது மகனே பின்பற்றுவது கிடையாது ..ஒரு மனைவி புகார் கொடுத்து உள்ளே போகவேண்டிய இந்த ஆள் .. பிஜேபி என்ற கவசத்திற்குள் இருப்பது மட்டும் உண்மை ..இவரை யாரும் இஸ்லாமியராக கருதுவதும் இல்லை .. இவரை ஆதரிப்போரும் இல்லை .. இவர் தனது கீழ்த்தரமான நடவடிக்கை காரணமாக ஒரு இயக்கத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர் எனவேதான் இவருக்கு பிஜேபி அபயமளித்துள்ளது ..
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,இந்தியா
19-செப்-202010:43:39 IST Report Abuse
Abdul Aleem முதலில் உன்னடைய பிரச்சனையை சரிசெய் அப்பறம் நீ முஸ்லிம்களுடைய பிரச்னையை சரி செய்யலல்லாம் எங்களுக்கு தெரியும் எது நல்ல கட்சி என்று
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
18-செப்-202019:53:11 IST Report Abuse
Indian  Ravichandran பாய் கொஞ்சம் எச்சரிக்கையை இருங்க இந்த த்ரவிடாஸ் குரூப் உங்க மக்களை உங்களுக்கு எதிரே திருப்பிவிடும் முஸ்லீம்களை ஏமாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் கட்டுமரம் அண்ட் கோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X