கொரோனா தடுப்பூசி; 51% வாங்க பணக்கார நாடுகள் ஒப்பந்தம்

Updated : செப் 18, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (2)
Advertisement
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' என்ற தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் வி' என்ற தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.



latest tamil news




இந்த தடுப்பு மருந்துகளின் விற்பனை வழிமுறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் 'ஆக்ஸிபேம்' (பஞ்சத்தை ஒழிப்பதற்கான ஆக்ஸ்போர்டு குழு) நிறுவனம், தனது ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது.

அதில் தெரிவித்துள்ளதாவது:உலகளவில் இதுவரை 5 கொரோனா தடுப்பு மருந்துகளே இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த மருந்துகள்தான் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மருந்துகளின் மொத்த உற்பத்தியில் சரிபாதியை பெறுவதற்கான ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பெற்றுவிட்டன.


அதாவது, மருந்துகளில் மொத்த விநியோகத்துக்காக கணக்கிடப்பட்டிருக்கும் 530 கோடி டோசில் 270 கோடி டோஸ்களை (51%) ஒப்பந்தத்தின்படி இந்த நாடுகள் பெற்றுவிடும். மீதமுள்ள 260 கோடி டோஸ்களை பெற இந்தியா, வங்கதேசம், சீனா, பிரேசில், இந்தோனேசியா, மெக்சிகோ உள்ளிட்ட வளரும் நாடுகள் ஒப்பந்தம் செய்திருக்கின்றன.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



'உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு கொள்ளை நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து, அனைத்து நாட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். பணத்துக்காக ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் மருந்துகளை வழங்குவது மனித உரிமைகளுக்கு எதிரானது' என, சமூக ஆர்வலர்கள் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
18-செப்-202018:42:28 IST Report Abuse
venkatan இப்போ என்ன...நாம அதை செய்வோம்..அரசு தனியார் இணைந்து ஏழை நாடுகளுக்கு கட்டுபடியா கக்கூடிய விலையில் ஏகமாக த்தயாரித்திடுவோம்.பணக்கார நாடுகளுக்கு உச்ச விலை கொடுத்து வாங்கவேண்டும்.இல்லயெனில் பணக்கார நாடுகளின் பணக்காரர்கள் இந்தியாவிற்கு கொடை அளிக்க வேண்டும். ஆனாலும் தனக்கு மிஞ்சியதே தானம்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
18-செப்-202017:50:07 IST Report Abuse
S. Narayanan எல்லா நாடுகளும் சரி சமமாக பெறுவதே சரியான தீர்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X