சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 18, 2020
Share
Advertisement
அதிகரிக்கும் வெப்பநிலை வடக்கு அரைக்கோளத்தில் கடந்த ஜூன் - ஆகஸ்டில் பதிவான வெப்பநிலை, இதற்கு முந்தைய ஆண்டுகளில் பதிவான சராசரி வெப்பநிலையை விட, 1.17 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவானது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அரைக்கோளத்தை சேர்த்தால் இது 1880ம் ஆண்டிலிருந்து பதிவான மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை. வடக்கு அரைக் கோளத்தில் பதிவான 2வது அதிகபட்ச வெப்பநிலை. வட

அதிகரிக்கும் வெப்பநிலை

வடக்கு அரைக்கோளத்தில் கடந்த ஜூன் - ஆகஸ்டில் பதிவான வெப்பநிலை, இதற்கு முந்தைய ஆண்டுகளில் பதிவான சராசரி வெப்பநிலையை விட, 1.17 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவானது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அரைக்கோளத்தை சேர்த்தால் இது 1880ம் ஆண்டிலிருந்து பதிவான மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை. வடக்கு அரைக் கோளத்தில் பதிவான 2வது அதிகபட்ச வெப்பநிலை. வட அரைக்கோளம் என்பது பூமியின் மையக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகள். பூமியின் பெரும்பாலான பகுதிகள் 70 சதவீத மக்கள்தொகை இங்கு உள்ளனர்.


தகவல் சுரங்கம்



பெரிய விலங்கியல் பூங்கா

தென் ஆப்ரிகாவின் முதல் தேசிய பூங்கா (க்ரூஜர் தேசிய பூங்கா )1926ல் லிம்போபோ நகரில் தொடங்கப்பட்டது. இதன் பரப்பளவு 19,485 சதுர கி.மீ. இது உலகின் பெரிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு 2011 கணக்கின் படி, 1700 சிங்கங்கள், 120 சிறுத்தைகள், 13,750 யானைகள், 10,௦௦௦ காண்டாமிருகங்கள், 9000 வரிக்குதிரைகள், 4420 முதலைகள் போன்ற பலவகையான விலங்குகள் வாழ்கின்றன. 517 வகையான பறவை களும் உள்ளன. இப்பூங்காவில் ௯ நுழைவுவாயில்கள் உள்ளன. 2015 கணக்கின் படி ஆண்டுதோறும் 16.60 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X