தே.ஜ., கூட்டணியில் விரிசல்?: ஹர்சிம்ரத் ராஜினாமா பின்னணி

Updated : செப் 20, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் பதவியை அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தது, டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே, அகாலி தளம் கட்சி, இந்த சடுகுடு ஆட்டத்தை அரங்கேற்றுவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.விவசாயத் துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் வகையிலும், விவசாயிகளின் வருமானத்தை
தேஜ, கூட்டணி, ஹர்சிம்ரத், ராஜினாமா, பாஜ,

விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சர் பதவியை அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தது, டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே, அகாலி தளம் கட்சி, இந்த சடுகுடு ஆட்டத்தை அரங்கேற்றுவதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயத் துறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் வகையிலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், மூன்று முக்கிய மசோதாக்கள் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டன. விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா ஆகிய மசோதாக்கள், லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக, இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.


கடும் எதிர்ப்பு


இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும், பஞ்சாபைச் சேர்ந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சியின் முக்கிய தலைவரும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்தவருமான ஹர்சிம்ரத் கவுர், அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தது, டில்லி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவரது ராஜினாமாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஏற்றார்.இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:பஞ்சாப் மாநிலத்தின் பிரதான தொழிலே விவசாயம் தான். இங்கு விவசாயிகளை எதிர்த்து, யாரும் அரசியல் செய்ய முடியாது; அவ்வாறு செய்தால், அது, விஷப் பரீட்சையாகவே முடியும். இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு முன், கூட்டணி கட்சியான தங்களை, அரசு தரப்பில் கலந்தாலோசிக்கவில்லை என, அகாலி தளம் தலைவரும், ஹர்சிம்ரத் கவுரின் கணவருமான சுக்பீர் சிங் பாதல் குறை கூறியுள்ளார். இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இந்த சட்ட மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம். இதுதவிர, கமிஷன் ஏஜென்டுகளாக, 28 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே, இந்த மசோதாவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என, அச்சம் அடைந்துஉள்ளனர்.


பீதி நிலவுகிறது


இந்த மசோதாக்கள் அமலுக்கு வந்தால், தங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, கமிஷன் கிடைக்காது என, இவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை, விவசாய மண்டலங்களை தாண்டி, எங்கு வேண்டுமானலும் விற்பனை செய்ய, இந்த மசோதா வகை செய்கிறது.இதனால், எப்.சி.ஐ., எனப்படும் இந்திய உணவுக் கழகம், தங்களிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்றும், தங்களுக்கான, 2.5 சதவீத கமிஷன் கிடைக்காமல் போய் விடும் என்றும், இடைத்தரகர்கள் எனப்படும் கமிஷன் ஏஜென்டுகளிடையே பீதி நிலவுகிறது.

மாநில அரசும், தங்களுக்கு கிடைக்கும், 6 சதவீத கமிஷனுக்கு இந்த மசோதா வேட்டு வைக்கும் என கருதுகிறது. கமிஷன் ஏஜென்டுகளின் ஆதிக்கம் மற்றும் ஜாட் சமூகத்தினரின் எதிர்ப்பை மீறினால், 2022ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், தங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என, அகாலி தளம் கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.


கருத்து வேறுபாடு


மேலும், சமீப காலமாகவே, பா.ஜ.,வுக்கும், அகாலி தளம் கட்சிக்கும் இடையேயான உறவில் கருத்து வேறுபாடு அதிகம் நிலவுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில், பஞ்சாபில், மொத்தம் உள்ள, 117 தொகுதிகளில், அகாலி தளம், 94; பா.ஜ., 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆனாலும், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது; அகாலி தளம் படு தோல்வியைச் சந்தித்தது.

தற்போது, பஞ்சாபில், பா.ஜ., பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், அடுத்த சட்டசபை தேர்தலில், சரிசம தொகுதிகளை அந்த கட்சி கேட்கும் என, அகாலி தளம் கருதுவதால், கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கு அச்சாரமாக, விவசாய மசோதா விவகாரத்தை கையில் எடுத்து, அரசியல் செய்கிறது.

தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்தல்களில், அகாலி தளம் தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்த தேர்தலிலும் தோல்வியை சந்திக்கக் கூடாது என்பதற்காக, பஞ்சாபின் மிகப் பெரிய ஓட்டு வங்கியாக உள்ள விவசாயிகளின் விசுவாசியாக, தங்களை அடையாளப் படுத்த, அகாலி தளம் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.இதற்கான முதல் படியாக, விவசாய மசோதாவை கடுமையாக எதிர்க்கும் விஷயத்தில் தீவிரம் காட்டவும் திட்டமிட்டுள்ளனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


மசோதாவும், எதிர்ப்பும்!வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா


* விவசாயிகள், விவசாய மண்டலங்களுக்கு வெளியிலும் தங்கள் விளைபொருட்களை தடையின்றி மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்ய வழி வகுப்பதே, இந்த மசோதாவின் நோக்கம். இடைத்தரகர்களுக்கு வேலையே இல்லை

* விவசாய மண்டலங்களுக்கு வெளியில் விற்பனை செய்யும் பொருட்களுக்காக, மாநில அரசுகள் வரி வசூலிக்க முடியாது

* விளைபொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை. 'பான் கார்டு' வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடலாம்.


எதிர்ப்பு ஏன்?


பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள், இடைத்தரகர்கள் எனப்படும், கமிஷன் ஏஜென்டுகள் வாயிலாகவே தங்கள் விளைபொருட்களை விற்க விரும்புகின்றனர். கமிஷன் ஏஜென்டுகளின் நிதி ஆதாரத்தில் இவர்கள்வைத்திருக்கும் நம்பிக்கையே இதற்கு காரணம்.
விளைபொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா

* விவசாய பொருட்கள் தொடர்பான வர்த்தகத்துக்கான விதிமுறைகள் உருவாக்கப்படும்

* விவசாயிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் குறிப்பிட்ட விலைக்கு பொருட்களை விற்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள, இந்த மசோதா அனுமதி அளிக்கிறது

* விவசாயிகளின் உரிமையையும், பாதுகாப்பையும் இந்த மசோதா உறுதி செய்கிறது

* விவசாயத் துறை தொடர்பான விதிமுறைகள், விவசாய மண்டலங்கள் தொடர்பான சட்டத்தை ஒழுங்குபடுத்த இந்த மசோதா வழி வகை செய்கிறது.


எதிர்ப்பு ஏன்?


'விளைபொருட்களின் விலையை நிர்ணயிப்பதற்கான குறிப்பிட்ட நடைமுறை எதுவும் இதில் இல்லை. விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வாய்ப்பை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த மசோதா அளித்து விடும்' என, எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரசாரம் செய்யப்படுகிறது. அத்தியாவசிய பொருள் திருத்த மசோதா

* அத்தியாவசிய பொருள் சந்தை நிர்வாகத்தின் சீர்திருத்தத்துக்கு இந்த மசோதா உதவும்
* உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்டவற்றின் வினியோகத்தை, பேரிடர் காலங்களில் மட்டுமே மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும்; மற்ற நேரங்களில் இவை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் வராது.


எதிர்ப்பு ஏன்?


'இந்த மசோதா ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும். உணவு பாதுகாப்பு விஷயத்தை குறைத்து எடை போடும் வகையில் உள்ளது' என, எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.


அரசியல் காரணம்!


ஹர்சிம்ரத் கவுர், அரசியல் காரணத்துக்காகவே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், தே.ஜ., கூட்டணியில், அகாலி தளம் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. எங்களின் கொள்கை வேறு; அகாலி தளம் கட்சியின் கொள்கை வேறு.

அஸ்வனி சர்மா,

பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர்


திட்டமிட்ட நாடகம்!


பா.ஜ.,வுக்கும், அகாலி தளத்துக்கும் இடையே என்ன பகை என எங்களுக்கு தெரியவில்லை. ஹர்சிம்ரத்தின் ராஜினாமா திட்டமிட்ட நாடகம். விவசாய மசோதாவை எதிர்க்க வேண்டும் என நினைத்தால், தே.ஜ., கூட்டணியிலிருந்து அவர்கள் வெளியேறாதது ஏன்... பஞ்சாபையும், இங்குள்ள வசாயிகளையும் அழிக்கும் நோக்கத்துடன் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அமரீந்தர் சிங்,
பஞ்சாப் முதல்வர், காங்கிரஸ்
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-செப்-202004:04:40 IST Report Abuse
J.V. Iyer இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இடைத்தரகர்கள் என்று புரிகிறது. ஏன் திமுக இதனை எதிர்க்கிறது என்று தெரிகிறது. கமிஷன் போய்விடுமே
Rate this:
Cancel
Murugan - Puducherry,இந்தியா
19-செப்-202020:05:08 IST Report Abuse
Murugan UPA govt gave the rights of taking decision on petrol prices to oil companies, what happened now, NDA giving the rights to corporates to determine food grains prices , No govt is thinking about comman people,
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
19-செப்-202019:53:27 IST Report Abuse
m.viswanathan பாஜாக தமிழகத்தில் மலரும் ஆனா மலராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X