துரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் அருள்வாக்கு

Updated : செப் 19, 2020 | Added : செப் 18, 2020 | கருத்துகள் (21) | |
Advertisement
தி.மு.க., பொதுச் செயலர்துரைமுருகன், தன் மகன்கதிர் ஆனந்துடன், மாகதேவமலையைச் சேர்ந்த விபூதி சாமியாரை சந்தித்து, ஆசி பெற்றுள்ளார். அப்போது, தமிழக அரசின் உச்ச பதவியில், துரைமுருகன் அமருவார் என, சாமியார் அருள்வாக்கு கூறியதாக தெரிகிறது.துரைமுருகனுக்கு பெரிய மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து, சாமியார் அருள்வாக்கு கூறியுள்ளார்.இந்த புகைப்படம், சமூக
துரைமுருகனுக்கு மாகதேவமலை விபூதி சாமியார் அருள்வாக்கு

தி.மு.க., பொதுச் செயலர்துரைமுருகன், தன் மகன்கதிர் ஆனந்துடன், மாகதேவமலையைச் சேர்ந்த விபூதி சாமியாரை சந்தித்து, ஆசி பெற்றுள்ளார். அப்போது, தமிழக அரசின் உச்ச பதவியில், துரைமுருகன் அமருவார் என, சாமியார் அருள்வாக்கு கூறியதாக தெரிகிறது.துரைமுருகனுக்கு பெரிய மாலையையும், கதிர் ஆனந்திற்கு சால்வையும் அணிவித்து, சாமியார் அருள்வாக்கு கூறியுள்ளார்.இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவியதால், தி.மு.க., வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து, துரைமுருகன் ஆதரவு வட்டாரங்கள் கூறியதாவது:வேலுார் லோக்சபா தேர்தலில், கதிர் ஆனந்த் வெற்றி பெறுவார் என, விபூதி சாமியார் முன்கூட்டியே கணித்து கூறினார். அவர் கூறியது, அப்படியே நடந்தது.அதேபோல, துரைமுருகனுக்கும், தமிழக அரசின் உச்ச பதவி கிடைக்கும் என, சாமியார் கூறியதால், அவரது வாக்கு பலிக்கும் என்ற, நம்பிக்கை உருவாகி உள்ளது.கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து, பொதுச் செயலர் வரை உயர்ந்து விட்டார், துரைமுருகன். ஆட்சி அதிகாரத்தில், ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாகவும், மூன்று முறை அமைச்சர் பதவியும் வகித்துள்ளார்.அவருக்கு கிடைக்காத பதவி என்றால், கட்சி தலைவர் பதவியும், முதல்வர், துணை முதல்வர் பதவியும் தான். கட்சி தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் ஸ்டாலின் உள்ளார். அப்படி என்றால், துரைமுருகனுக்கு, சாமியார் கூறிய உச்ச பதவி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., ஆட்சி அமைந்தால், துணை முதல்வர் பதவி அல்லது சபாநாயகர் பதவி கிடைக்கலாம் என, அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. - நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

Sampath Kumar - chennai,இந்தியா
20-செப்-202008:14:41 IST Report Abuse
Sampath Kumar பட்டம் பதவிக்கு ஆக மட்டுமே கடவுள் தேவை . பரவாய் இல்லை இதுக்கா பயன் பெறுகிறார் ?? பகுத்து அறிவு பஹூத்த்து அக்கே
Rate this:
Cancel
RUPA - KOLKATA,இந்தியா
19-செப்-202011:12:19 IST Report Abuse
RUPA Hello Mr. Stalin , what is your decision for this?
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
19-செப்-202010:18:56 IST Report Abuse
PR Makudeswaran யாரைத்தான் நம்புவது enru தெரியவில்லையே இந்த கேடு இழந்த தி மு க வில் மற்றும் அதி மு க வில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X