பொது செய்தி

இந்தியா

ஆந்திரா அசாமில் பள்ளிகளை திறக்க முடிவு

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
andhra, assam, school, open, ஆந்திரா, அசாம், பள்ளி, திறக்க, முடிவு

புதுடில்லி: மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, ஆந்திரா மற்றும் அசாமில், நாளை மறுநாள்,(செப்.,21) பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, நாளை மறுநாள் முதல், பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மாநில அரசுகள், இதுகுறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளை திறக்க, அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமி நாசினி பயன்படுத்துவது, முக கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அசாமில், நாளை மறுநாள், பள்ளிகளை திறக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, அடுத்த, 15 நாட்களுக்கு, ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆந்திராவில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு வெளியே இயங்கும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹரியானாவில், பள்ளிகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஎனினும், ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு, பாடங்களில் சந்தேகம் இருந்தால், தங்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில், இரண்டு அரசு பள்ளிகள், சோதனை முறையில் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன.
டில்லியில், அக்டோபர், 5ம் தேதி வரை, பள்ளிகள் இயங்காது என, மாநில அரசு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. குஜராத், உத்தர பிரதேசம், கேரளா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படாது என, அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துஉள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rengaraj - Madurai,இந்தியா
19-செப்-202010:09:58 IST Report Abuse
Rengaraj மத்திய அரசு வழிகாட்டத்தான் முடியும், மாநில அரசுகள் நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்ய சொல்லிவிட்டார்கள். இது நிமித்தம் அந்த அந்த மாவட்ட நிர்வாகத்தின் கையில் முடிவை கொடுப்பதுதான் சரியாக இருக்கும். முதல் கட்டமாக பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளை உடனே நடத்த ஆரம்பிக்கலாம். ஒரு மாதம் கழித்து ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் வகுப்புகளை ஆரம்பிக்கலாம். . மற்ற வகுப்புகளை நிலைமைக்கு ஏற்ப பிறகு தொடங்கலாம். பறக்கும் படை என்று தேர்வு சமயத்தில் ஒரு படை பறந்து பறந்து பள்ளி பள்ளியாக சோதனைக்கு வரும். அந்த மாதிரி ஒரு படையை மாவட்ட நிர்வாகம் இந்த கொரோனா கால கட்டத்தில் பள்ளிகளின் செயல்பாடுகளை மற்றும் தூய்மை பணிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யலாம். விதி மீறும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் தலைமை ஆசிரியர் உட்பட தண்டிக்க வழிசெய்யலாம். தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும் மற்றும் ஒவ்வொரு மாணவனுக்கும் மாணவிக்கும் EMIS என்ற சிஸ்டம் மூலம் அவர்களைப்பற்றிய விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய படுகின்றன. அதில் இந்த விதி மீறலை குறிக்கலாம். பறக்கும் படையின் அறிக்கையின் படி மாவட்ட கல்வி அலுவலர் மட்டுமே இந்த விதி மீறலை இணையதளத்தில் உறுதி செய்யுமாறு பணிக்கலாம். விதி மீறும் மாணவர்களுக்கு அரசின் உதவி தொகை, சலுகைகள் கிடையாது, இறுதி தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று ஒரு கண்டிப்பான அறிவுப்பு இருந்தால் மட்டுமே அவர்களிடம் ஒழுங்கை எதிர்பார்க்கலாம். விதி மீறும் பள்ளிகளுக்கும் இதே போன்று ஒரு தண்டனை வழங்கப்படும் என்று ஒரு அறிவிப்பு இருக்கவேண்டும். அரசு தூய்மைக்காக எல்லாவித கட்டமைப்புகளையும் செய்துவிட்டு பள்ளிகளை திறந்து மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரத்தின்படி சுதந்திரமாக செயல்பட விட்டால் அது இந்த கொரோனா காலகட்டத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும். பள்ளிகளின் திறப்பை ஒத்திப்போடுவது நல்லது அல்ல.
Rate this:
Cancel
19-செப்-202008:06:32 IST Report Abuse
ருத்ரா சினேகிதிகளுடன் சேர்ந்து படித்து, விளையாடி , வீடியோ கேம் மறந்து பள்ளி செல்லும் குழந்தைகளை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X