பூர்வகுடியினரை சந்திக்க சத்குரு பைக்கில் பயணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூர்வகுடியினரை சந்திக்க சத்குரு பைக்கில் பயணம்

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (35)
Share
கோவை:அமெரிக்காவில் வசிக்கும் பூர்வகுடி மக்களை சந்திப்பதற்காக, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, பைக்கில் பயணம் புறப்பட்டார்.அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில், 1.5 சதவீதம் பேர், பூர்வகுடியினர். இவர்களது வரலாறு, கலாசாரம், வாழ்க்கை முறை பற்றி நேரடியாக அறிந்து கொள்ள முடிவு செய்த, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, பைக் பயணம் செல்ல திட்டமிட்டார்.

கோவை:அமெரிக்காவில் வசிக்கும் பூர்வகுடி மக்களை சந்திப்பதற்காக, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, பைக்கில் பயணம் புறப்பட்டார்.



latest tamil news



அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில், 1.5 சதவீதம் பேர், பூர்வகுடியினர். இவர்களது வரலாறு, கலாசாரம், வாழ்க்கை முறை பற்றி நேரடியாக அறிந்து கொள்ள முடிவு செய்த, ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, பைக் பயணம் செல்ல திட்டமிட்டார்.


latest tamil news



அதன்படி, அமெரிக்காவின் டென்னிஸி பகுதியில் இருந்து, அவரது பைக் பயணம் புறப்பட்டது. இந்த ஒரு மாத கால பயணத்தில், 15 மாநிலங்கள் வழியாக, 6,000 மைல் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.மகாளய அமாவாசை தினத்தன்று துவங்கிய சத்குருவின் பயணம், இல்லினாய்ஸ், மிசவுரி, நியூ மெக்சிகோ, கொலராடோ வழியாக மீண்டும் டென்னிஸியை வந்தடைகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X