ஐ.நா., இளம் தலைவர்கள் குழுவுக்கு 17 பேர் தேர்வு

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020
Share
Advertisement

நியூயார்க்: ஐ.நா.,வின், இளம் தலைவர்களுக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழுவில், டில்லியைச் சேர்ந்த, உதித் சிங்கால், 18, உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 17 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.



latest tamil news



இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலரின் இளையோருக்கான துாதர், ஜெயத்மா விக்ரமநாயகே வெளியிட்டுள்ள அறிக்கை:சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இளைஞர்களை ஊக்குவித்து, கவுரவிக்கும் வகையில், இளையோருக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழு தேர்வு செய்யப்படுகிறது.இந்தாண்டின் இளையோருக்கான, நிலைத்த வளர்ச்சிக் குழுவில், இந்தியா, பாக்., சீனா உள்ளிட்ட, நாடுகளைச் சேர்ந்த, இளம் தலைவர்கள், 17 பேர் தேர்வு செய்யப்பட்டுஉள்ளனர்.

அவர்கள், சுற்றுச்சூழல், வேளாண், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம், சமூக மேம்பாட்டிற்கு சீரிய பங்களிப்பை வழங்கிஉள்ளனர்.அவர்கள், மேலும் பல இளைஞர்களை ஊக்குவித்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை நிற்பார்கள். அதற்கான அனைத்து உதவிகளையும், ஐ.நா., பொதுச் செயலரின் இளையோருக்கான துாதரகம் செய்யும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த, 'பிரிட்டிஷ் பள்ளி' மாணவரான, உதித் சிங்கால், தனது, 'கிளாஸ் 2 சாண்ட்' திட்டத்தின் மூலம், கழிவு பாட்டில்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளார்.'சிலிக்கா' பிளாஸ்டிக் ஆதிக்கத்தால், பழைய கண்ணாடி பாட்டில்களுக்கு, நல்ல விலை கிடைப்பதில்லை. இதையடுத்து, உதித் சிங்கால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, உயர்தரமான 'சிலிக்கா' மணலாக மாற்றுகிறார்.


latest tamil news



இந்த வகையில், 8,000 பாட்டில்கள் மூலம், அவர், 4,815 கிலோ சிலிக்கா மணலை தயாரித்துள்ளார்.இந்திய துாதர் சந்திப்புஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர், டி.எஸ்.திருமூர்த்தி, நேற்று, ஐ.நா., பொதுச் சபையின், 75வது ஆண்டு கூட்ட தலைவர், வோல்கன் போக்சிரை சந்தித்து பேசினார். இருவரும், பொதுச் சபையின், 75 ஆண்டு பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் குறித்து பேசியதாக, திருமூர்த்தி, 'டுவிட்டரில்' தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X