நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது யோகா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது யோகா'

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யோகா செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என பார்லி.,யில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.இதுகுறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே அளித்த பதில்: ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான, எம்.டி.என்.ஐ., கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 6,500 பேருக்கு யோகா பயிற்சி
Yoga, helping, Covid19 patients, boost immunity, reduce stress

புதுடில்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் யோகா செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என பார்லி.,யில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

இதுகுறித்து லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சவுபே அளித்த பதில்: ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான, எம்.டி.என்.ஐ., கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 6,500 பேருக்கு யோகா பயிற்சி அளித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யோகா செய்வதன் வாயிலாக அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் மன அழுத்தம் குறைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம், கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து குடும்பத்துடன் கொண்டாடப்பட்டதாகவும், இதற்காக ஆயுஷ் அமைச்சகம், பிரசர் பாரதியுடன் இணைந்து 'டிடி' நேஷனில், ஒரு பயிற்சியாளர் தலைமையிலான யோகா அமர்வை ஒளிபரப்பியது எனவும் தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X