விளம்பரத்திற்காகவே பலர் கிளம்பி உள்ளார்களோ| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விளம்பரத்திற்காகவே பலர் கிளம்பி உள்ளார்களோ

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (3)
Share
திரையரங்கு உரிமையாளர்களை வீதியில் நிற்க வைத்து, கண்ணீரை சிந்த வைத்து, ஓ.டி.டி., எனப்படும், இணையதளத்தில் படங்களை வெளியிட்ட நடிகர் சூர்யா, பொழுது போகாத நேரமெல்லாம், கருத்து சொல்வது வேடிக்கையாக இருக்கிறது - வைகைச் செல்வன்.'விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப்போது, சிலர் இவ்வாறு கிளம்பியுள்ளனர்...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்திதொடர்பாளர் வைகைச்
வைகைச் செல்வன், துரைசாமி,காமராஜ்,சரத்குமார்,

திரையரங்கு உரிமையாளர்களை வீதியில் நிற்க வைத்து, கண்ணீரை சிந்த வைத்து, ஓ.டி.டி., எனப்படும், இணையதளத்தில் படங்களை வெளியிட்ட நடிகர் சூர்யா, பொழுது போகாத நேரமெல்லாம், கருத்து சொல்வது வேடிக்கையாக இருக்கிறது - வைகைச் செல்வன்.


'விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இப்போது, சிலர் இவ்வாறு கிளம்பியுள்ளனர்...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்திதொடர்பாளர் வைகைச் செல்வன் அறிக்கை.தி.மு.க.,வில் உதயநிதி, எ.வ.வேலு போன்றோரை முன்னிலைப்படுத்திய பின், அக்கட்சி நாளும் தேய்ந்து கொண்டே வருகிறது. அக்கட்சியில் இருந்து, அதிகளவில், பா.ஜ.,வுக்கு வருகின்றனர். இதனால், பா.ஜ., வளர்ந்து வருகிறது - பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி.


'வந்து சேர்ந்தால் மட்டும் வளர்ந்து விடுமா; ஓட்டு விழ வேண்டுமே...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில துணைத் தலைவர் துரைசாமி பேட்டி.இந்த ஆண்டு மட்டும், தமிழகத்தில், 32 லட்சம் டன் நெல், அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, எங்கள் அரசின் சாதனை - தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.


'கொள்முதல் செய்த நெல், மழையில் நனைவதாக, ஊடகங்களில் செய்திகள் வருகின்றனவே...' என, நெத்தியடியாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பேச்சு.சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார அறிவுரைகளை பின்பற்றாமல், ஆபத்தான வகையில் குப்பையை கையாளுகின்றனர். முக கவசம், கையுறை போன்றவற்றை அவர்கள் முறையாக அணிந்துள்ளனரா என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட வேண்டும் - நடிகர் சரத்குமார்


latest tamil news

'தெருக்களில் குப்பை அள்ளுவதை, சமூக நலத்துடன் உன்னிப்பாக கவனித்துள்ளீர்கள்; அறிக்கை அளித்து விட்டீர்கள். சபாஷ்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், நடிகர் சரத்குமார் அறிக்கை.சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராடிய, மார்க்சிஸ்ட் மாநில செயலர் சீதாராம் யெச்சூரி மற்றும் யோகேந்திர யாதவ் போன்றோர் மீது, கலவரத்தை துாண்டியதாக, மத்திய அரசு பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. அதை வாபஸ் பெற வேண்டும் - மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்.


'தடை உத்தரவை மீறி, போராட துாண்டுவது, போராடுவது. வழக்கு போட்டால், வாபஸ் பெறு என, கோஷமிடுவது, உங்கள் கட்சிக்கு வழக்கமாக போய் விட்டது...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு.தமிழகத்தில் நடந்துள்ள விவசாயிகள் நிதி முறைகேடு தொடர்பாக, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அவர்களில், 35 பேர், வழக்குடன் தொடர்பில்லாதவர்கள். ஆளும் தரப்பில் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதால், சி.பி.ஐ., மூலம் விசாரிக்க வேண்டும் - தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி


'இதற்கு மட்டும் மத்திய அரசின், சி.பி.ஐ., விசாரணை தேவை என்பீர்கள். பிற விவகாரங்களில், மாநில சுயாட்சி என, கொடி பிடிப்பீர்கள்...' என, கண்டிக்கத் துாண்டும் வகையில், தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி பேட்டி.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X