மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி நிர்பயா நிதி விடுவிப்பு: ஸ்மிருதி இரானி| Dinamalar

மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி நிர்பயா நிதி விடுவிப்பு: ஸ்மிருதி இரானி

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.3,024.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.லோக்சபாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிர்பயா நிதி மற்றும் மாநிலங்கள் செலவிட்டுள்ள தொகை குறித்த கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில்:
CentreReleased, NirbhayaFund, States_UTs, WCD_Ministry

புதுடில்லி: நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.3,024.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

லோக்சபாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட நிர்பயா நிதி மற்றும் மாநிலங்கள் செலவிட்டுள்ள தொகை குறித்த கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில்: நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை ரூ.3,024.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் ரூ.1,919.11 கோடியைச் செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக டில்லிக்கு மட்டும் ரூ.409.03 கோடி விடுவிக்கப்பட்டது. அதில், ரூ.352.58 கோடி செலவிட்டுள்ளது.


latest tamil news


உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.324.98 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், ரூ.216.75 கோடி செலவிட்டுள்ளது. தமிழகத்துக்கு ரூ.303.06 கோடி விடுவிக்கப்பட்டதில் ரூ.265.55 கோடி செலவிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை உரிய நேரத்தில் திறம்பட விசாரிப்பதற்காக பாலியல் வன்முறைக்கான ஆதாரங்களைத் திரட்டும் 14,950 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.97 கோடியாகும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 3,056 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்துக்கு 1,452 கருவிகளும், மத்தியப் பிரதேசத்துக்கு 1,187 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X