அமெரிக்காவில் காந்தி சிலையை உடைக்க முயற்சி; டிரம்ப் கண்டனம்

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
MahatmaGandhi, Trump, GeorgeFloyd, Protesters, டிரம்ப், மகாத்மா காந்தி, சிலை, ஜார்ஜ், போராட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் புளாயிட் படுகொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனை அடுத்து பிளாக் லைப் மேட்டர்ஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் தொடர்ந்து நூறு நாட்களுக்கும் மேலாக சில இடங்களில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப் புகை மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். தற்போது அமெரிக்காவின் சில மாகாணங்களில் அவ்வபோது இந்த போராட்டக்காரர்கள் இன்னும் ஓயாமல் போராடிய வண்ணமே உள்ளனர். அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகே மகாத்மா காந்தியின் சிலை உள்ளது.


latest tamil news


இந்த போராட்டக்காரர்கள் சிலர் இந்த சிலையை தற்போது அடித்த சாய்த்து உள்ளனர். இந்த சிலையை பின்னர் இந்திய தூதரக அதிகாரிகள் நிமிர்த்தி வைத்துள்ளனர். டிரம்ப் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி வழியை போதித்த மகாத்மா காந்தியின் சிலையை போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் உள்ள இந்த திருடர்கள் உடைக்க முயன்றுள்ளனர். இவர்கள் அடுத்தடுத்து ஜார்ஜ் வாஷிங்டன், ஜெபர்சன் ஆகிய தலைவர்களின் சிலையை உடைக்கவும் தயங்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bismi - Cincinnati,யூ.எஸ்.ஏ
20-செப்-202000:02:06 IST Report Abuse
Bismi தெற்கு ஆப்பிரிக்காவில் காந்தி தன பொது வாழ்வை தொடங்கியபோது, அவரது போக்கில் இனப்பாகுபாடு காணப்பட்டது. இந்தியர்களுக்கு போராடும்போது கறுப்பர்களை தாழ்த்திப் பேசினார். அசைக்க முடியாத வரலாற்று ஆதாரம் உள்ளது. பிறகு அவரது போராட்டத்தில் மாறுதல் காணப்பட்டது. இந்த வரலாறு இந்தியாவில் மறைக்கப்படுகிறது.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
19-செப்-202023:29:23 IST Report Abuse
Allah Daniel எங்க...கமலா ஹாரிஸை கண்டனம் சொல்ல சொல்லு பாப்போம்...
Rate this:
Cancel
19-செப்-202022:32:53 IST Report Abuse
kulandhai Kannan இங்கேதான் முடியவில்லை. அங்கேயாவது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X