அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல் காரணங்களுக்காக வேளாண் மசோதாவுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு: முதல்வர் இபிஎஸ் கண்டனம்

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
D.M.K, M.K.Stalin, Stalin, தி.மு.க, ஸ்டாலின், agriculturebill, stalin, CMeps, அரசியல்,வேளாண்மசோதா, முதல்வர் இபிஎஸ்

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை, திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாக முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் வேளாண் மசோதாக்கள் உள்ளன. இந்த மசோதாவால், விவசாயி கொள்முதல், செய்வோர் என இருவர் நலனும் பாதுகாக்கப்படும். கிராமப்புறங்களில் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு பெருகும். தமிழகத்தில் கரும்பு, கோகோ சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் ஒப்பந்த முறை இருக்கிறது.

இந்த மசோதா விளைபொருட்களுக்கு போட்டி முறையில், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்கிறது. விளைபொருள் கொள்முதலில் விவசாயிக்கு பான் எண் தேவையில்லை. வணிகர்களுக்கு இருந்தால் போதுமானது. விவசாயிகளை கட்டாயபடுத்தவோ, பாதிக்கும் வகையில் எந்த ஷரத்துகளும் இல்லை. இந்த மசோதாவை அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் எதிர்க்கிறார். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இதுபோன்ற சட்டத்தை இயற்றிய போது ஸ்டாலின் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சட்டத்தின்படி விவசாயி கொள்முதல் நபர் இடையே வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். கொள்முதல் செய்வோர் நலன், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் தொடரும். விளைபொருட்களின் கொள்முதல் தொடரும் எனபதால் விவசாயிகளை பாதிக்காது. குறைந்தபட்ச ஆதாரவிலை அடிப்படையில் நடந்து வரும் நெல்கொள்முதல் பாதிக்காது. உணவு பொருட்களை பதுக்கப்படுவதை தடை செய்கிறது.


latest tamil news


விளைபொருள் விலை எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைவதால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படுகிறது. உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும் என்பதை விவசாயி ஆகிய நான் உணர்ந்துள்ளேன். வேளாண் மசோதா மூலம் விவசாயிகள் மற்றும் கொள்முதல் செய்வோர் நலன் பாதுகாக்கப்படும். விவசாயி ஆகிய நான் உணர்ந்ததால் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்திற் பொருந்தாது. ஒரு முறை அல்லஒராயிரம் முறை விவசாயி என சொல்வதில் பெருமைப்படுகிறேன். விவசாயிகளின் நலனை காக்க அனைத்து உறுதியான நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் இபிஎஸ் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
20-செப்-202016:21:20 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மாண்பமைமுதல்வரேநீர்ஓர்விவசாயிஅதனால்அதன்பலன்தெரிகிறது.ஸ்டாலின்விவசாயிஅல்லவே.பெட்டைகோழிகூவுவதுபோல்கூவுகிறார் .அதனால் பொழுதுபுலரபோவதில்லை. மாண்பமை பிரதமர் மோடிஜீயைஅவரின்நல்லதிட்டத்தை எதிர்ப்பதே அவர்களின் பிரதானதொழில் வேறொன்றும்இல்லை.
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
20-செப்-202011:26:12 IST Report Abuse
natarajan s அத்தியா அரசு எந்த மசோதா கொண்டுவந்தாலும் எதிர்க்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் எழுத படாத விதி. இந்த மசோத இடை தரகர்களின் குறுக்கீட்டை தடுக்கும், தற்போதுள்ள APMC (Agriculture Produce Marketing Committee ) சரியாக செயல் படவில்லை (தோல்வி ) விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை அதனால் இந்த மசோதாக மூலம் தாங்களே சந்தை படுத்த முடியும் , விலை நிர்ணயம் சந்தை வரவு / தேவைக்கு ஏற்ப செய்ய படும் . எதுவானாலும் சிலருக்கு இழப்பு இருக்கும், தற்போதுள்ள சூழ்நிலையில் குடும்ப நிரபந்தம் காரணமாக நிலங்கள் சிறு சிறு பகுதிகளாக பிரிக்க பட்டுள்ளதால் ஒருங்கிணைந்த விவசாயம் செய்தால் மட்டுமே உற்பத்தி எடுக்க முடியும், அதற்க்கு CONTRACT FARMING நல்ல முறை. 1970 கலீல் கோவை துடியலூர் பகுதி இல் TUCAS என்று கூட்டுறவு முறையில் நன்றாக விவசாயம் நடைபெற்றது. வழக்கம் போல் நமது கழக கண்மணிகள் புண்ணியத்தால் மூடு விழா கண்டு நிலங்கள் வீடு மனைகளை ஆகி விட்டது. அந்த கால கட்டத்தில் அகில இந்திய அளவில் அது ஒரு( MODEL ) மாதிரி முயற்சி வெற்றிகரமாக செயல் பட்டது. இனிவரும் காலங்களில் விவசாயிகளின் நிரந்தர வருமானத்திற்கு இந்த CONTRACT FARMING முறைதான் சிறந்தது . சிறு குறு விவசாயிகளால் input cost / தண்ணீர் தேவை போன்றவற்றை சமாளிக்க முடியாது இனி வரும் காலங்களில். சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் ஜெயா அரசு இதை முன்னெடுத்தது அதை CORPORATE FARMIMG என்று நமது இடது சாரிகள் நடை முறை படுத்த அனுமதிக்க வில்லை.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-செப்-202008:40:25 IST Report Abuse
Sampath Kumar நீங்களும் அதே காரணத்துக்கு தானே ஆதரவு உண்மையை சொன்னதுக்கு பாராட்டுகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X