30 ஆண்டு கால சேவைக்குப் பின் இறுதிப் பயணம் மேற்கொள்ளும் ஐ.என்.எஸ் விராத் கப்பல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

30 ஆண்டு கால சேவைக்குப் பின் இறுதிப் பயணம் மேற்கொள்ளும் ஐ.என்.எஸ் விராத் கப்பல்

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: கடந்த 30 ஆண்டு கால சேவைக்குப் பிறகு இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராத் குஜராத்திற்கு இறுதிப் பயணம் மேற்கொள்கிறது.கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து இந்த கப்பல் விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக பிரிட்டன் கடற்படையில் எச்,எம்.எஸ் ஹெர்மஸ் என்ற பெயரில் இந்த கப்பல் சேவையாற்றியது. 1944 ம் ஆண்டு விக்கர்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்ற பிரிட்டன்
ins virat war ship, last journey, gujarat, britain, 30 years, ஐ.என்.எஸ்.,விராத் கப்பல், இறுதி பயணம், குஜராத், பிரிட்டன், 30 வருடங்கள், சேவை

புதுடில்லி: கடந்த 30 ஆண்டு கால சேவைக்குப் பிறகு இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராத் குஜராத்திற்கு இறுதிப் பயணம் மேற்கொள்கிறது.

கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து இந்த கப்பல் விலக்கிக் கொள்ளப்பட்டது. முன்னதாக பிரிட்டன் கடற்படையில் எச்,எம்.எஸ் ஹெர்மஸ் என்ற பெயரில் இந்த கப்பல் சேவையாற்றியது. 1944 ம் ஆண்டு விக்கர்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்ற பிரிட்டன் நிறுவனத்தால் கட்டப்பட்டது இந்த கப்பல். 1959 ம் ஆண்டு பிரிட்டன் கப்பற்படையில் இது இணைந்தது. 1971ல் ஹெலிகாப்டர்கள் தாங்கும் கப்பலாக மாற்றி அமைக்கப்பட்டது. இது 1984ம் ஆண்டு இந்திய கப்பற்படைக்கு விற்கப்பட்டது. மே 1987 முதல் இந்திய கடற்படையில் விமானம் தாங்கி கப்பலாக சேவையை துவங்கியது. இது பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்காக வாங்கப்பட்ட ஒரே கப்பலாகும்.


latest tamil news



இந்திய கப்பற்படையிலிருந்து இது விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அதை அருங்காட்சியகமாகவோ அல்லது உணவகமாகவோ மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அத்திட்டம் கைகூடாததால் இதை உடைக்கும் ஒப்பந்தத்தை குஜராத் நிறுவனம் ஸ்ரீராம் குழுமம் பெற்றுள்ளது. இதையடுத்து இக்கப்பல் குஜராத் மாநிலத்திலுள்ள அலங்க் கப்பல் உடைக்கும் தளத்திற்கு ஐஎன்எஸ் விராத் கப்பல் தன் இறுதி பயணத்தை துவக்கி உள்ளது. இது இதுவரை 11 லட்சம் கி.மீ., பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X