அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்வி துறை கட்டடங்கள் திறப்பு

Added : செப் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பள்ளி கல்வி துறை கட்டடங்கள் திறப்பு

சென்னை:பள்ளிக் கல்வித்துறை சார்பில், 49.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார்.

சென்னை, நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில், 1.22 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன், 39.90 கோடி ரூபாய் மதிப்பில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கட்டடம் கட்டப்பட்டுள்ளது.


நபார்டு கடனுதவி

நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ், கோவை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில், ஐந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 9.70 கோடி ரூபாய் மதிப்பில், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளன.இவற்றை, முதல்வர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் பங்கேற்றனர். அத்துடன், பள்ளிக் கல்வி இயக்ககத்தின், அமைச்சுப் பணிக்கு, 635 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மின் நிலையங்கள் திறப்பு

ஈரோடு, சென்னை, கோவை, கடலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி, வேலுார் மாவட்டங்களில், 353.11 கோடி ரூபாய் செலவில், 25 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வர், தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, திறந்து வைத்தார்.

கடந்த ஆண்டு, முதல்வர் லண்டன் சென்றார். அப்போது, அங்கு இயக்கத்தில் உள்ள, 'ஸ்மார்ட் கிரிட்' தொழில்நுட்பத்தை பார்வையிட்டார். அதை, தமிழகத்திலும் செயல்படுத்த முடிவு செய்தார். அதன்படி, நாட்டில் முதன்முதலாக, தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான, திட்ட ஒப்பந்த ஆணையை, பெங்களூரில் உள்ள, 'என்சென் குலோபல் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்திற்கு, முதல்வர் வழங்கினார்.

இந்த புதிய தொழில்நுட்பம், அதிக காற்றாலை மின் உற்பத்தியை, மின் கட்டமைப்பில் ஒருங்கிணைப்பதோடு, மின் கட்டமைப்பின் அலகு வேறுபாடுகளையும் நெறிப்படுத்த உதவும்.


வைகையில் தடுப்பணை

மதுரை மாவட்டம்,மாடக்குளம் கண்மாய்க்கு நீர் வழங்கி, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீரை செறிவூட்ட, வைகை ஆற்றின் குறுக்கே, 17.40 கோடி ரூபாய் செலவில், தடுப்பணை அமைக்கப்பட உள்ளது. இதற்கு, முதல்வர் இ.பி.எஸ்.,அடிக்கல் நாட்டினார். இந்த தடுப்பணை கட்டப்பட்டால், 3,360.13 ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும். அதை சுற்றியுள்ளப் பகுதி மக்களின், குடிநீர் தேவை பூர்த்தியாகும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.


கால்வாய் புனரமைப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட, திருமங்கலம் பிரதான கால்வாயின், முதல் கிளைக் கால்வாய், 6.83 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட உள்ளது.தென்காசி தாலுகா, சீவலப்பேரி குளத்தை சுற்றி, 70 லட்சம் ரூபாய் மதிப்பில், நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இவற்றுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

பொதுப் பணித் துறையில், 2018 -- 19, 2019 -- 20ம் ஆண்டுகளுக்கான, 148 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியாக தேர்வானோருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக, ஏழு பேருக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜு, உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், பொதுப்பணித் துறைச் செயலர் மணிவாசன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-செப்-202004:02:31 IST Report Abuse
J.V. Iyer துணை முதல்வர் ஓபிஎஸ் எதையும் திறக்க கூடாதா என்ன அவர் என்ன பாவம் செய்தார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X