பொது செய்தி

இந்தியா

2008ல் ரூ.3 லட்சம் கோடி: இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி

Updated : செப் 21, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி:கடந்த, 2008ல், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், உலகின் ஆறாவது பணக்காரராக இருந்த, ரிலையன்ஸ் கம்யூ., குழும தலைவர் அனில் அம்பானி, இன்று சொந்தமாக 1 ரூபாய் கூட இல்லை என, தெரிவித்துள்ளார்.இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமம், 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க, சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம், 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. இதற்கு, அனில் அம்பானி
2008ல் ரூ.3 லட்சம் கோடி, இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி

புதுடில்லி:கடந்த, 2008ல், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், உலகின் ஆறாவது பணக்காரராக இருந்த, ரிலையன்ஸ் கம்யூ., குழும தலைவர் அனில் அம்பானி, இன்று சொந்தமாக 1 ரூபாய் கூட இல்லை என, தெரிவித்துள்ளார்.இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமம், 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க, சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம், 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. இதற்கு, அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார்.


நீதிமன்றத்தில் வழக்குஇந்நிலையில், ரிலையன்ஸ் குழுமம் கடனை திரும்பத் தரத் தவறியதால், சீன வங்கிகள், உத்தரவாதம் அளித்த அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.இந்த வழக்கு, கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அனில் அம்பானிக்கு என, தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை' என, அவர் தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த, வங்கிகள் தரப்பு வழக்கறிஞர், அனில் அம்பானிக்கு, கார்கள், தனி விமானம், மனைவி டினா அம்பானிக்கு பரிசளித்த ஹெலிகாப்டர், மும்பையில் இரண்டடுக்கு சொகுசு பங்களா ஆகியவை உள்ளதாக தெரிவித்தார். இதற்கு, ''அந்த சொத்துக்கள், ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானவை; அனில் அம்பானியிடம் ஒரு சொத்தும் இல்லை,'' என, ஹரிஷ் சால்வே வாதிட்டிருந்தார்.


கடனாளிகடந்த, 2012ல் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட சரிவால், ரிலையன்ஸ் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. இதையடுத்து, அனில் அம்பானி, தனிப்பட்ட வகையில், 2,200 கோடி ரூபாய் கடனாளியானார். அந்தாண்டு, 52 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக இருந்த அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு, தற்போது பூஜ்யமாகி விட்டது என, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை இன்னும் நீதிமன்றம் ஏற்கவில்லை. கடந்த, 2008ல், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், உலகின் ஆறாவது பணக்காரர் என, அனில் அம்பானியை, 'போர்ப்ஸ்' பத்திரிகை பாராட்டியிருந்தது. இதை, 12 ஆண்டுகளில் இழந்ததுடன், தன்னிடம் எந்த சொத்தும் இல்லை என, அனில் அம்பானிஒப்புக் கொண்டுள்ளார். இவரது சகோதரர், முகேஷ் அம்பானி, 6 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், உலக பணக்காரர்களில் நான்காவது இடத்திலும், இந்தியாவில் முதலிடத்திலும் உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan Rengaswamy - Chennai,இந்தியா
24-செப்-202009:45:18 IST Report Abuse
Ganesan Rengaswamy நம்ம வூரில் வாழும் திடீர் பணக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
Rate this:
Cancel
21-செப்-202017:43:39 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) வாழ்க்கை ஒரு வட்டம் மேல் இருப்பவன் ஒரு நாள் கீழ் வருவான் கீழ் இருப்பவன் ஒரு நாள் மேல் வருவான்.
Rate this:
Cancel
20-செப்-202021:25:55 IST Report Abuse
இந்தியன் மஸ்தான் ஏதாவது உதவி செய்யுங்கள்..ப்ளீஸ் மஸ்தான்..சன்டா நீங்களும் பாருங்க..ப்ளீஸ்..நிம்மி குட்டீ
Rate this:
sivan - seyyur,இந்தியா
21-செப்-202023:06:49 IST Report Abuse
sivan நிம்மி குட்டி என்று அநாகரீகம் எழுதுவதை தினமலர் அனுமதிக்கிறதா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X