பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரிப்பு: அஜீத் தோவல்

Updated : செப் 19, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
cyber crimes, 500 percent, increase, ajit thovel, சைபர் குற்றங்கள், அதிகரிப்பு, அஜித் தோவல்

புதுடில்லி: இந்தியாவில் சைபர் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் ஆன்லைனில் நடந்த சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் கொரோனா பேரிடரால் ரொக்கப்பணம் கையாள்வது குறைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். டிஜிட்டல் பண வர்த்தகம் மூலம் தனிமனித தகவல்கள் திருடப்படுவதாக அவர் தெரிவித்தார்.


latest tamil news



இந்த சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் பரவாமல் தடுக்க தேசிய இணைய பாதுகாப்பு உத்தி 2020 ஐ அரசு துவங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நம்பகமான, பாதுகாப்பான இணைய வசதி உறுதி செய்யப்பட உள்ளது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-202022:23:54 IST Report Abuse
ஆப்பு டிஜிட்டல் இந்தியா சார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X