பொது செய்தி

இந்தியா

உள்நாட்டு கடன் ரூ.100 லட்சம் கோடியை தாண்டியது

Updated : செப் 21, 2020 | Added : செப் 19, 2020 | கருத்துகள் (11+ 3)
Share
Advertisement
உள்நாட்டு கடன் ரூ.100 லட்சம் கோடி'கிடுகிடு'

புதுடில்லி : இந்தியப் பொருளாதாரத்தில், கொரோனா ஏற்படுத்திய கடுமையான தாக்கத்தால், கடந்த, ஜூன் நிலவரப்படி, உள்நாட்டு கடன், முதன் முறையாக 100 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 24ல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன.விமானம், ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது. அத்தியாவசிய சேவைகள், சரக்கு போக்குவரத்து ஆகியவை மட்டும் நடைபெற்றன.


ஊக்கச் சலுகைஇதன் காரணமாக, நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவ, மத்திய அரசு, 20 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்தது. கடன் தவணைச் சலுகை, இலவச உணவுப் பொருட்கள் விநியோகம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய்க்கு உத்தரவாதமற்ற கடன் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

கொரோனா பரவலை தடுக்க, லட்சக்கணக்கான முகக் கவசங்கள், கிருமி நாசினிகள், வெப்ப மானிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கான பாதுகாப்பு ஆடைகள், நோய் தடுப்பு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கூடுதலாக சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. விளையாட்டு மைதானம், கல்லுாரிகள், பல்கலைக் கழக வளாகங்கள், பிரத்யேக மருத்துவ முகாம்களாக மாற்றப்பட்டன.ஒருபுறம் நோய்த் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்ட மத்திய அரசு, மறுபுறம் மக்களின் பொருளாதார பாதிப்பை ஈடு செய்ய, மிகப் பெரிய அளவிலான செலவினங்களை மேற்கொண்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதால், வரி வருவாயும் வீழ்ச்சி அடைந்தது. இதுபோன்ற காரணங்களால், மத்திய அரசின் நிதிச் சுமை அதிகரித்து, கடன் பல மடங்கு உயர்ந்துள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:


ரூ.7 லட்சம் கோடிநடப்பு, 2020-21ம் நிதியாண்டின், ஏப்., - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மத்திய அரசின் கடன், திடீரென, 7 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. கொரோனா நிவாரண நடவடிக்கைகளால் கடன் உயர்ந்துள்ளது. இதனால், முதன் முறையாக, மத்திய அரசின் உள்நாட்டுக் கடன், 100 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.இவற்றில், அரசு செலவினங்கள், இருப்பு மற்றும் டிபாசிட்டுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், சிறப்பு மானியங்களுக்கான கடன் பத்திர வெளியீடுகள் மற்றும் இதர கடன்கள் அடங்கும். மதிப்பீட்டு காலத்தில், உள்நாடு, வெளிநாடு ஆகியவற்றை உள்ளடக்கிய, இந்தியாவின் கடனில், அரசு திட்டக் கடன்கள் தவிர்த்த மொத்த கடன், 92.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த, 2018-19ம் நிதியாண்டு நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடன், 43 சதவீதமாக இருந்தது.இதை, 2௦23 மார்ச்சில், 40 சதவீதமாக குறைக்க, மத்திய நிதி ஒழுங்குமுறை மற்றும் பட்ஜெட் மேலாண்மை அமைப்பு, பரிந்துரைத்திஇருந்தது.இந்நிலையில், கொரோனா பிரச்னையால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடன், 60 சதவீதமாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சி நடவடிக்கைகள் துரித வேகத்தில் நடந்தால் தான், கடன் அதிகரிக்காமல், ஸ்திரமாக இருக்கும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (11+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
20-செப்-202023:33:07 IST Report Abuse
amuthan அம்பானி போன்ற பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் போது சில மூடர்கள் பொத்திக் கொண்டு இருப்பார்கள். ஏழை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் வயிறு எரிகிறது. இவ்வளவு கடன் இருக்கு போதும் சிலர் மட்டும் உலகின் பெரும் பணக்காரர் ஆகிறார் எப்படி
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
20-செப்-202020:42:16 IST Report Abuse
R chandar High time to curtail and eliminate subsidies,and freebies, (Gold for marriage, pongal gift, subsidy in Electricity,Subsidy in Transport,milk and other items, Ration items)DA for government staff ,reduce salary for mp,mla,governor,with that money give cash support for entire public includes government staff,and political people , based on their ration card of the family which has linked to aadhar card an amount of Rs 3000 per month per card. Put transaction tax for trust,who are all doing turnover of more than 25 lakhs in a year, make them exempt from paying income tax. For individuals who are earning more than Rs 50 lakhs put transaction tax for them on their income and expenses. Raise GST tax on communication and fuel, and eliminate toll fees for entry to any state . Put Extra GST on products and give them exemption in payment of income tax, and eliminate the present method of set off GST output with input of GST and give them exemption from payment of income tax on profits. Apply more indirect tax instead of direct tax and catch their payment of tax under PAN account in form 26AS. Exempt of income tax to who ever paying GST on their services and goods they are availing.
Rate this:
Cancel
20-செப்-202020:03:27 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இதில் விரைவில் 32 லட்சம் கோடி குறையும் அது தான் LIC விற்க போகிறார்களே அப்புறம் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X