பாதிப்பில் பறவைகள்
ஐரோப்பாவில் அலைபேசி, 'வைபை' ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு, பூச்சிகள் அழிவதற்கு காரணமாக அமையலாம் என ஜெர்மனியின் இயற்கை மற்றும் பல்லுயிர் பெருக்கம் அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 190 அறிவியல் ஆய்வுகளை இக்குழு ஆராய்ந்தது. இதில் 79 ஆய்வுகள், தேனீக்கள், குளவிகள், ஈக்கள் போன்ற பூச்சியினங்கள் அலைபேசி கதிர்வீச்சால் பாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இனி வரவுள்ள '5ஜி' தொழில்
நுட்பம் பாதிப்பை மேலும் அதிகமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
ரயில்வே பாதுகாப்பு படை
ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) துவங்கப்பட்ட தினம் (செப்.,20) இன்று கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே சொத்துகள், பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 1872 ஜூலை 2ல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டது. பின் 1985 செப்., 20ல் ரயில்வே பாதுகாப்புபடையாக மாற்றப்பட்டது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இதில் 75 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். தலைமையகம் டில்லி. 18 மண்டலங்கள் உள்ளன. 2019 டிசம்பரில் ஆர்.பி.எப்., என்பது இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஐ.ஆர்.பி.எப்., ) என பெயர் மாற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE