அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி, அரசியல் வருவதை வரவேற்கிறேன்: அண்ணாமலை அழைப்பு

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

ஒட்டன்சத்திரம்:''பா.ஜ., கொள்கையும், ரஜினி கொள்கையும் அடிப்படையில் ஒன்றாக உள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ''நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் ஆன்மிகப் புரட்சி வரவேண்டும்'' என பா.ஜ., மாநில துணை தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியுமான அண்ணாமலை கூறினார்.



latest tamil news



திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. அதில் பங்கேற்றவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய மசோதாக்களையும் வரவேற்கிறேன். முதலாவது மசோதா விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க செய்வது. இரண்டாவது விவசாயிகளே விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது. மூன்றாவது சில பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்யும் நிலையை உடைப்பது.


latest tamil news



வருமானம் இரட்டிப்பாகும்இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளும், பயனாளிகளும் நேரடியாக பயன்பெறும் வகையில் இந்த மசோதாக்கள் உள்ளன. இதனால் 2022ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.பல ஆண்டுகளாக பழநியை தனி மாவட்டமாக ஆக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தில் 2021ல் பா.ஜ., ஆட்சிக்கு வரும். அதன் பின் பழநியை தனி மாவட்டமாக்க மேல்மட்ட நிர்வாகிகள் முடிவு எடுப்பர். அதற்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
20-செப்-202013:01:51 IST Report Abuse
S. Narayanan ரஜினி அரசியலுக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்கள் வரவேற்பர். பி ஜே பி யுடன் கூட்டணி அமைத்து ஆன்மீக அரசியலில் மக்களை முன்னேற்றும் வகையில் ஆட்சி நடத்த வேண்டும். ரஜினி சார் தயக்கம் வேண்டாம்.
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
20-செப்-202012:25:32 IST Report Abuse
Rameeparithi தி க கட்சிகள் அரசியலை அசிங்கம் செய்து விட்டு மக்களை அச்சப்படுத்தி விட்டனர் சேவை மனப்பான்மை உள்ளோரையும் சேற்றில் கால் வைக்க தயக்கம் தந்து விட்டனர் சேவையில் சில்லரை கொழிக்கும் சிறப்பான தொழிலாக மாற்றிய புண்ணியம் மஞ்சள் துண்டையே சேரும், ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
kanchi devanathan - Kanchi,இந்தியா
20-செப்-202011:55:36 IST Report Abuse
kanchi devanathan அண்ணாமலை மற்றும் ரஜினி இருவருக்கும் நான் சிறப்பு கருவறை அர்ச்சனை செய்வேன். இவர்கள் இருவரும் வந்து ஆன்மீகத்தை பெரிய அளவில் பரப்ப வேண்டும். ஆன்மிகம் தான் எனக்கு பெரிய அளவில் பலதரப்பட்ட மகிழ்ச்சி தந்தது..ஆன்மிகம் வந்தால் அனைவருக்கு பெரிய அளவில் பல தரப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X