பொது செய்தி

இந்தியா

ஜம்மு - காஷ்மீருக்கு ரூ.1,350 கோடி ஊக்கச்சலுகை திட்டம் அறிவிப்பு

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கத்தை சமாளிக்க, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கு, 1,350 கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



latest tamil news



இது குறித்து, ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர், மனோஜ் சின்ஹா கூறியதாவது:பிரதமர், மோடியின், 'தற்சார்பு பாரதம்' கொள்கைப்படி அறிவித்த ஊக்கச் சலுகை திட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீரில், 1,350 கோடி ரூபாய்க்கு வரலற்று சிறப்புமிக்க புதிய சலுகைகள் அமலுக்கு வருகின்றன.இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலா உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி காணும். ஊரடங்கால் சாதாரண மக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை கருதி, ஜம்மு-காஷ்மீரில் ஓராண்டுக்கு, மின் கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, காஷ்மீரில் வர்த்தகத் துறை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் கடன்களுக்கு, 5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இதற்காக, அரசு, 950 கோடி ரூபாய் ஒதுக்கும். கடன் பெறுவோருக்கு, 2021, மார்ச் வரை, முத்திரைத் தாள் தீர்வையில் விலக்கு அளிக்கப்படும்.சுற்றுலா துறையைச் சேர்ந்த, டாக்சி, ஆட்டோ ரிக் ஷா ஓட்டுனர்கள், படகு வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு நிதியுதவி அளிக்க, ஜம்மு-காஷ்மீர் வங்கி மூலம், சிறப்பு உதவி திட்டம் அமல்படுத்தப்படும்.


latest tamil news



கைத்தறி மற்றும் கைவினை துறைகளைச் சேர்ந்தவர்களின் 'கிரெடிட் கார்டு' கடன் வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அத்துடன், இத்துறைகளை ஊக்குவிக்க, 7 சதவீத வட்டிச் சலுகை வழங்கப்படும்.காஷ்மீரில், தொழில் முனைவுப் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவ, அக்.,1 முதல், ஜம்மு அண்டு காஷ்மீர் வங்கியில் புதிய சேவை மையம் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
காஷ்மீருக்கு, ஏற்கனவே, 1,400 கோடி ரூபாய்க்கு ஊக்கச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளன. இதனால், பொருாளதார மீட்சிக்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, புதிய ஊக்கச் சலுகைகள் மூலம், பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி காணும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
20-செப்-202012:42:44 IST Report Abuse
 Muruga Vel காஷ்மீரில் எப்போதுமே மின்சாரத்துக்கு பில் கட்டுவதில்லை... சில கான்டிராக்டர்கள் தவிர யாரும் PAN கார்டே வைத்துக்கொள்வதில்லை ..ஜம்மு ஒருவகையில் தேவலாம் ..நல்ல வளர்ச்சி .. தீவிரவாதத்தை கைவிட்டு சுற்றுலாவை வளர்க்க பாடு பட்டால் கார்போரேட்டுகள் முதலீடு நிறைய செய்வார்கள் .. கொக்கர்நாக் போன்ற இயற்க்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஆளரவமின்றி இருக்கின்றன ..நிறைய காஷ்மீர் இளைஞர்கள் மற்ற மாநிலங்களில் வியாபாரம் செய்ய வருகிறார்கள் ..ஸ்ரீநகரில் அருமையான மருத்துவ கல்லூரி ..ரீஜனல் இஞ்சனியரிங் காலேஜ் ...சுவிஸ் நாட்டுக்கு இணையாக குல்மார்க் போன்ற இடங்கள் ...
Rate this:
Cancel
20-செப்-202007:11:56 IST Report Abuse
ஆப்பு சுற்றுலாவை எப்பிடி? எல்லோரயும் முடக்கி வெச்சிருக்காங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X