பொது செய்தி

தமிழ்நாடு

ஆளுங்கட்சி கோஷ்டிகளால் திணறும் காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள்

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆளுங்கட்சி, கோஷ்டி, காசிமேடு, மீன்வளத்துறை, அதிகாரிகள்

ஆளுங்கட்சிகளின் கோஷ்டிகள் ஆளாளுக்கு பாடாய் படுத்துவதால், காசிமேடில், மீன்வளத்துறை அதிகாரிகள் பணியாற்ற முடியாமல் திணறுகின்றனர். அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்பதை, ஆளுங்கட்சியினர் நிறுத்தாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, மீனவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், ஏராளமான பைபர் படகுகளுடன், மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இந்த துறைமுகத்திற்கு வரும் வாகனங்கள், படகுகளுக்கு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த வகையில், இதுவரை, 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறி, காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் மீது, அ.தி.மு.க.,வின் ஒரு பிரிவினர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமியிடம் சமீபத்தில் புகார் அளித்தனர். ஆளுங்கட்சிகளின் கோஷ்டி பிரச்னையால், மீன்வளத்துறை உதவி இயக்குனர் மீது, பொய் புகார் கூறப்பட்டுள்ளதாக, மீனவர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகளுக்கு ஆதராவாக, போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


latest tamil newsஇதுகுறித்து, இந்திய மீனவர் சங்க தலைவர் எம்.டி.தயாளன் கூறியதாவது: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் உத்தரவின்படி, உதவி இயக்குனர் வேலன் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் தலைமையில் குழு அமைத்து, முறையாக ரசீது கொடுத்து, ஆட்டோ, லாரி, வேன் மற்றும் விசைபடகுகளுக்கு, 50 முதல், 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை, மீன்பிடித் துறைமுக வளர்ச்சி, பராமரிப்புக்கு செலவிடப்படுகிறது. இதற்கு முன்பு இருந்த, வடசென்னை மீனவர் கிராமங்கள் ஐக்கிய பஞ்சாயத்து சபையினர், வாகனங்கள் மற்றும் படகுகளுக்கு கட்டணத்தை வசூலித்து, மீன்பிடித் துறைமுகம் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், தொடர்ந்து கையாடல் செய்து வந்தனர்.

தற்போது, பணம் கையாடல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், மீனவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.மேலும், காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் மீது, பொய் புகார் கூறுவது கண்டனத்துக்குரியது. ஆளும் கட்சியினரிடையே உள்ள உட்பூசல் காரணமாக, மீன்வளத் துறையில் சிறப்பாக செயல்படும் மீன்பிடி துறைமுக உதவி இயக்குனரை, அரசு வேலையை செய்யவிடாமல் தடுக்கின்றனர். மீனவர் அல்லாதவர்கள், மீனவர்களின் மீன்பிடி தொழில் சம்பந்தமான விஷயத்தில் தலையிட்டு, மீனவர்களுக்குள் பிரிவினையை உருவாக்குகின்றனர். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து, இதுபோன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியால், மீனவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தினால், தமிழகம் முழுதும் உள்ள அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி, அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news

'பணத்தை யாருக்கும் தர முடியாது'

கடந்த, 45 நாட்களில், வாகனம் மற்றும் படகுகளுக்கான கட்டணமாக, 22 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தொகை, மீன்பிடித்துறைமுக வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இதற்கான, அனைத்து வரவு - செலவுகளும் வெளிப்படையாக பராமரிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள், ஒரு அமைப்பின் பணத்தை, எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல், யாருக்கும் கொடுக்க முடியாது.
வேலன்,
மீன்வளத்துறை
உதவி இயக்குனர்,
காசிமேடு


பிரச்னை ஏன்?


இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:காசிமேடில், அமைச்சர் ஜெயகுமார் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும், அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவாளர்கள் ஒரு பிரிவாகவும் செயல்படுகின்றனர்.மதுசூதனன் ஆதரவாளர்கள், ஓரிடத்தில் மீன் ஏலம் விடுமாறு அறிவிக்கின்றனர். ஜெயகுமார் ஆதரவாளர்கள் மற்றோரிடத்தில் மீன் ஏலம் விடுமாறு கூறுகின்றனர். இவர்களது கோஷ்டி பூசலால், மீனவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த கோஷ்டி பூசல் காரணமாக தான், உதவி இயக்குனர் மீது, பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வினர் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். இது கண்டனத்துக்குரியது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-செப்-202012:35:56 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\மீனவர் அல்லாதவர்கள், மீனவர்களின் மீன்பிடி தொழில் சம்பந்தமான விஷயத்தில் தலையிட்டு, மீனவர்களுக்குள் பிரிவினையை உருவாக்குகின்றனர்.....\\.........இந்த கருத்து விவசாயி அல்லாத, ஆனால் விவசாயிகளின் விஷயங்களில் தலையிடும் ஸ்டாலினுக்கும் பொருந்துமோ?........
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-செப்-202009:31:23 IST Report Abuse
Lion Drsekar ஊரு இரண்டு பட்டால் ,,, கொண்டாட்டம் என்பார்கள் அதுபோல் இங்கு தேர்தல் முடிந்த பிறகு சண்டையை வைத்துக்கொண்டால் நன்றாக இருந்திருக்கும், இந்த சண்டையில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றாக சேர்கின்றனர், அடுத்து ஆட்சிக்கு வந்தால் யார் யார் அதிகாரிகள், யார் யாருக்கு எந்த பொறுப்பு எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது . உள்ளதும் பொது ,,,, கண்ணா என்பது போல் ஆகாமல் பார்த்துக்கொள்வது நல்லது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X