மத்திய அரசு திட்டம் வெற்றி பெறாது: ராகுல்| Dinamalar

மத்திய அரசு திட்டம் வெற்றி பெறாது: ராகுல்

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (25)
Share
புதுடில்லி: விவசாயிகளை, முதலாளிகளின் அடிமைகளாக்க மாற்ற நினைக்கும் மோடி அரசின் திட்டம் வெற்றி பெறாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், பார்லிமென்ட் லோக்சபாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. இந்த
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: விவசாயிகளை, முதலாளிகளின் அடிமைகளாக்க மாற்ற நினைக்கும் மோடி அரசின் திட்டம் வெற்றி பெறாது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், பார்லிமென்ட் லோக்சபாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிரானது என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், ராஜ்ய சபாவில் இந்த மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது.


latest tamil news



இந்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு :
மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் மூலம், விவசாயிகளுக்கு,
1. ஏபிஎம்சி/ விவசாய சந்தை முடிவில் குறைந்த பட்ச ஆதார விலை எப்படி கிடைக்கும்.
2. குறைந்த பட்ச ஆதார விலைக்கு ஏன் உத்தரவாதம் அளிக்கவில்லை.
விவசாயிகளை, முதலாளிகளின் அடிமைகளாக்க மோடி முயற்சி செய்கிறார். இதனை நாடு ஒர போதும் வெற்றி பெற அனுமதிக்காது. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X