தூதரக அதிகாரியை ஏற்க பாக்., மறுப்பு: இந்தியா கண்டனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தூதரக அதிகாரியை ஏற்க பாக்., மறுப்பு: இந்தியா கண்டனம்

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி: இந்திய தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டதை ஏற்காமல், பாகிஸ்தான் விசா வழங்க மறுத்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகத்தின் பொறுப்பு அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடைவை இந்தியா முன்மொழிந்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள பாகிஸ்தான், அவர் மூத்த அதிகாரி எனக்கூறியுள்ளது. விசா
JayantKhobragade, envoy, india, pakistan,  தூதரகஅதிகாரி, இந்தியா, பாகிஸ்தான்

புதுடில்லி: இந்திய தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டதை ஏற்காமல், பாகிஸ்தான் விசா வழங்க மறுத்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கான இந்திய தூதராகத்தின் பொறுப்பு அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடைவை இந்தியா முன்மொழிந்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்துள்ள பாகிஸ்தான், அவர் மூத்த அதிகாரி எனக்கூறியுள்ளது. விசா வழங்கவில்லை.இந்தியாவில் உளவுபார்த்ததாக கூறி, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி கடந்த ஜூன் மாதம், பாகிஸ்தானுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச அளவில் ஆதரவை திரட்ட முடியவில்லை. இதனால், தூதர் நியமன விவகாரத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளதுபாகிஸ்தானில் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்த நிலையில், மிகவும் மூத்த அதிகாரியான கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு கூறியுள்ளது.


latest tamil news



இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்தியதூதர்களை நியமனம் செய்வதில் பாகிஸ்தான் உத்தரவிட முடியாது எனக்கூறியுள்ளது. பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
1995ம் ஆண்டு ஐ.எப்எஸ்., அதிகாரியான ஜெயந்த் கோப்ரகடே, தற்போது, அணுசக்தி துறையில் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த காலங்களில் அவர் கிர்கிஸ்தான் தூதராகவும், ரஷ்யா, ஸ்பெயின், கஜகஸ்தானில் துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார். பாகிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X