ராஜ்யசபாவில் அமளி: எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை?| Dinamalar

ராஜ்யசபாவில் அமளி: எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை?

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: ராஜ்யசபாவில் பேப்பர்களை கிழித்து எறிந்தும், துணை சபாநாயகர் ஹரிவன்சின் மைக்கை பறிக்கவும் முயன்ற எம்.பி.,க்கள் மீது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா, இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும்
RajyaSabha, Chairman, action, MP,ruckus, torepapers,

புதுடில்லி: ராஜ்யசபாவில் பேப்பர்களை கிழித்து எறிந்தும், துணை சபாநாயகர் ஹரிவன்சின் மைக்கை பறிக்கவும் முயன்ற எம்.பி.,க்கள் மீது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news




லோக்சபாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா, இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின. திரிணமுல் எம்.பி., டெப்ரிக் ஓ பிரையன், காங்கிரஸ் எம்.பி., ரிபுன் போரா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், திமுக எம்.பி., திருச்சி சிவா ஆகியோர், அவையின் மையப்பகுதிக்கு சென்று, அப்போது அவையை நடத்தி கொண்டிருந்த ஹரிவன்சின் மைக்கை பறிக்க முயன்றனர். அவைத்தலைவருக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், பேப்பரை கிழித்து எறிந்தனர். இதனால், அவை நடவடிக்கைகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போது, குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.


latest tamil news


Advertisement


இந்த விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் வட்டாரங்கள் கூறுகையில், அவையில் இன்று நடந்த சம்பவங்கள் அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பேப்பரை கிழித்து எறிந்தும், அவைத்தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.


latest tamil news




ராஜ்யசபாவில் அவையை நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் பா.ஜ.,வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யபசாவில் இருந்த பெயர் வெளியிட விரும்பாத சில எம்.பி.,க்கள் கூறுகையில், ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் நடந்து கொண்ட எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X