டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் வந்ததால் பரபரப்பு| Dinamalar

டிரம்புக்கு விஷப்பொருள் தடவிய கடிதம் வந்ததால் பரபரப்பு

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (7)
Share
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து
Trump, Ricin, Letter, Containing, Poison, டிரம்ப், ரைசின், கடிதம், விஷப்பொருள், வெள்ளை மாளிகை

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இந்நிலையில் வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். கனடாவிலிருந்து அனுப்பப்பட்டதாக முகவரியிட்ட அந்த கடிதத்தில், ரைசின் என்ற கொடிய விஷப்பொருள் தடவப்பட்டிருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவிற்கு விஷப்பொருள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் அனுப்பிய நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X