6 மலைமுகடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இந்திய ராணுவம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

6 மலைமுகடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இந்திய ராணுவம்

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி: சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் லடாக்கின் கிழக்கு பகுதியில் 6 பகுதிகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஆக.,29 முதல் செப்.,2வது வாரம் வரை, லடாக்கின் கிழக்கில் உள்ள பிங்கர் 4 பகுதியில் அமைந்துள்ள மகர்,
IndianArmy, occupy, major, height,  LAC, China, இந்தியா, சீனா, மலைமுகடு,

புதுடில்லி: சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் லடாக்கின் கிழக்கு பகுதியில் 6 பகுதிகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஆக.,29 முதல் செப்.,2வது வாரம் வரை, லடாக்கின் கிழக்கில் உள்ள பிங்கர் 4 பகுதியில் அமைந்துள்ள மகர், குருங், ரிசெஹன் லா, ரெஜாங்லா, மொக்பாரி உள்ளிட்ட 6 மலைமுகடுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.

பனி நிறைந்து காணப்படும் இந்த மலைமுகடுகளை கைப்பற்ற, சீன ராணுவம் கண் வைத்திருந்தது. யாரும் செல்லாத இந்த உச்சி பகுதிகளுக்கு, இந்திய ராணுவம் விரைந்து சென்று தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இந்த பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பாங்காங் ஏரியில் இருந்து தெற்கு கரை பகுதி வரை 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பிளாக் டாப் மற்றும் ஹெல்மெட் டாப் ஹில் ஆகிய பகுதிகள் சீனாவுக்கு முக்கியமானவை. ஆனால் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டில் வந்தவை, இந்தியாவின் எல்லைக்குள் அமைந்துள்ளது. இதனையறிந்த சீன ராணுவம், ரெஜாங் லா மற்றும் ரெசென் லா பகுதி அருகே கூடுதலாக 3 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது. சீன ராணுவத்தின் கீழ் செயல்படும் மோல்டோ கரிசன் படைப்பிரிவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


எல்லையில் சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து, பாதுகாப்பு படைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நடவடிக்கைகள் எடுப்பதுடன், கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைதலைமை தளபதிபிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அப்போது முதல் இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மோதலின் போது ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற முடிவை இந்தியா மாற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X