அறிவியல் ஆயிரம்
பழமையான கால்தடம்
சவுதியில் ஒரு ஏரியின் அருகே 1.20 லட்சம் ஆண்டு களுக்கு முந்தைய மனிதர்கள், யானை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் கால்தடம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஆப்ரிகாவில் இருந்து ஆசியாவுக்கு இவ்வழியாக மக்கள் இடம் பெயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆய்வுகளில் மக்களின் இடம்பெயர்தல், கடற்கரை வழியாக இருந்தது என கூறப்பட்டது. இந்த ஆய்வில் நிலங்களின் மத்தியிலும், ஏரி, குளங்களை
பின் தொடர்ந்து இடம்பெயர்வு நடைபெற்றிருக்கலாம் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
அல்சைமர்ஸ் தினம்
'அல்சைமர்ஸ்' என்பது ஒருவகை மறதி நோய். இது மூளை செல்லை பாதிக்கிறது. இதனால் மனக்குழப்பம், நீண்டகால ஞாபகமறதி, பதட்டம் ஏற்படுகிறது.ஜெர்மன் உளவியலாளர் 'அலாய்ஸ் அல்சைமர்ஸ்', 1906ல் இந்நோய் பற்றி கண்டறிந்தார். இதனால் இதற்கு இவரது பெயரே வைக்கப்பட்டது. இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் தாக்குகிறது. இந்நோய் பாதித்தவர்களை பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச அல்சைமர்ஸ் தினம் செப்.,21ல் கடைபிடிக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE