என்ன குழந்தை : மனைவி வயிற்றை கிழித்து பார்த்த ஐந்து மகள்களின் தந்தை

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
லக்னோ: ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட ஐந்து மகள்களின் தந்தை ஒருவர் கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்து என்ன குழந்தை என்று பார்த்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: உ.பி.,மாநிலம் படான் பகுதியை சேர்ந்தவர் பன்னலால் (43) தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே ஐந்துபெண் குழந்தைகள் உள்ளன. தற்போது இவரது மனைவி அனிதா தேவிஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். ஏற்கனவே

இந்த செய்தியை கேட்க

லக்னோ: ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட ஐந்து மகள்களின் தந்தை ஒருவர் கர்ப்பிணி மனைவியின் வயிற்றை கிழித்து என்ன குழந்தை என்று பார்த்த சம்பவம் அரங்கேறி உள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: உ.பி.,மாநிலம் படான் பகுதியை சேர்ந்தவர் பன்னலால் (43) தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே ஐந்துபெண் குழந்தைகள் உள்ளன. தற்போது இவரது மனைவி அனிதா தேவிஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார்.


ஏற்கனவே ஐந்து குழந்தைகளும் பெண்ணாக பிறந்துள்ளதால் தற்போது பிறக்க போகும் குழந்தையும் பெண்ணாக பிறந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தினார். இது சம்பந்தமாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை(19 ம் தேதி) இது சம்பந்தமாக மீண்டும் வாக்குவதாம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பன்னலால் கூர்மையான ஆயுதத்தை எடுத்து மனைவியின் வயிற்றை கிழித்து குழந்தையின் பாலினத்தை காண முயற்சித்துள்ளார்.


latest tamil news



கணவனின் செயலால் அலறி துடித்த அனிதா தேவியின் சத்தம் கேட்டு பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை பரேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பன்னலால் ஒரு மகனை விரும்புவதாகவும், அது ஆண் அல்லது பெண் கருவா என்பதை அறிய குற்றத்தைச் செய்ததாக அக்கம்பக்கத்தினர் குற்றம் சாட்டினர்.

இச்சம்பவத்தை உறுதிபடுத்த்திய போலீஸ் எஸ்.பி., பிரவீன் சிங் சவுகான் கணவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
25-செப்-202011:22:53 IST Report Abuse
Sankare Eswar எத்தனை... யு பீ இல் இருக்கிறது என்று கணக்கெடுக்க வேண்டும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-செப்-202003:41:12 IST Report Abuse
J.V. Iyer இந்த கணவன் மூளையில் உள்ளது களிமண்ணா அல்லது கருங்கல்லா என்று மனைவி உடனே கீறிப்பார்க்க அனுமதிக்க வேண்டும்.
Rate this:
ram, nigeria - Lagos,நைஜீரியா
21-செப்-202023:58:33 IST Report Abuse
ram, nigeria இந்த கணவன் மூளையில் உள்ளது களிமண்ணா அல்லது கருங்கல்லா என்று மனைவி உடனே மண்டையை உடைத்தது பார்க்க அனுமதிக்க வேண்டும்...
Rate this:
Cancel
20-செப்-202023:01:47 IST Report Abuse
ஆப்பு உ.பி தானே... மூடர்களின் கோட்டை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X