மாலத்தீவில் பொருளாதார நெருக்கடி: இந்தியா ரூ.1850 கோடி நிதியுதவி

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
மாலே:கொரோனா பாதிப்பால், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவிற்கு, இந்தியா சார்பில், 1,850 கோடி ரூபாய், நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடான மாலத்தீவில், கொரோனா பாதிப்பால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு நிதியுதவி வழங்கும்படி, பிரதமர், நரேந்திர மோடியிடம், அந்நாட்டு அதிபர், இப்ராஹிம் முகமது சோலிஹ்

மாலே:கொரோனா பாதிப்பால், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாலத்தீவிற்கு, இந்தியா சார்பில், 1,850 கோடி ரூபாய், நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




தெற்காசிய நாடான மாலத்தீவில், கொரோனா பாதிப்பால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு நிதியுதவி வழங்கும்படி, பிரதமர், நரேந்திர மோடியிடம், அந்நாட்டு அதிபர், இப்ராஹிம் முகமது சோலிஹ் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து, கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக, 1,850 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக, இந்தியா அறிவித்தது. நிதி வழங்கும் விழா, மாலேவில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில், நடைபெற்றது.



இதுகுறித்து, அந்நாட்டின் இந்திய துாதரகம், வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - -மாலத்தீவு நாடுகள், இணைந்து செயல்படும் நடவடிக்கைகளை, இது எடுத்துக்காட்டுகிறது. கடினமான காலங்களில், மாலத்தீவு அரசாங்கத்திற்கு ஆதரவாக, இந்தியா தொடர்ந்து செயல்படும்.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதே, இரு நாடுகளின் முக்கிய நடவடிக்கையாக உள்ளது. இதற்காக, மாலத்தீவிற்கு மருத்துவர்கள் குழு, 11.7 டன் அத்தியாவசிய மருந்துகள், 580 டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.


latest tamil news




மருத்துவ உபகரணங்களை மாலத்தீவிற்கு வழங்க, அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள், இந்தியாவில் நீக்கப்பட்டன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - chennai,இந்தியா
22-செப்-202017:43:56 IST Report Abuse
Raja அப்பனுக்கே அரை கோவணம். இழுத்து போத்துடா மகனேன்னு சொன்னானாம்.
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
21-செப்-202006:14:00 IST Report Abuse
Ravi பிச்சை எடுக்குதாம் பெருமாள் அதையும் பிடுங்குதாம் அனுமார் என்கிற மாலத்தீவு, நேபால், பங்களாதேஷ், இலங்கை போன்ற வெட்கம் கேட்ட சுயமரியாதை-நன்றி இல்லாத நாடுகள் - இல்லாவிட்டால் சீனப்பக்கம் போய்விடுவார்கள் என்ன செய்ய இந்தியாவின் குறிப்பாக தென்னிந்தியாவின் பாதுகாப்பிற்காக நாம் செய்துதான் ஆகவேண்டும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-செப்-202003:35:22 IST Report Abuse
J.V. Iyer சுற்றியுள்ள நாடுகளை வளைத்துப் போட்டு சீனா இந்தியா அருகில் வந்தால், பாதுகாப்பிற்கு நல்லது அல்ல. அவர்களை இந்த நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்யாமல் பாதுகாப்பது நல்லது. இதெல்லாம் முன்பிருந்த ஆட்சியாளர்களால் வந்த வினை. என்ன செய்வது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X