கொரோனாவில் இருந்து குணமடைந்தார் 106 வயதான மூதாட்டி

Updated : செப் 20, 2020 | Added : செப் 20, 2020
Share
Advertisement

மும்பை : மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து 106 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயினும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளால், கொரோனா இறப்பு விகிதம் குறைந்து, மீட்பு விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர, மருத்துவமனையின் சிகிச்சை மட்டுமின்றி, நோயாளியின் உடல் மற்றும் மன உறுதியும் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து 106 வயதான மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

மஹாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலும், நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமானவர் களுக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் தானே மாவட்டம், டோம்பிவ்லியை தளமாக கொண்ட 106 வயதான மூதாட்டி ஒருவருக்கு சோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப் பட்டது. ஆனால் எந்தவொரு மருத்துவமனையும் ஆரம்பத்தில் அவரது வயது காரணமாக அவரை அனுமதிக்கத் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. பின்பு, கல்யாண் டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (KDMC) அமைத்த கொரோனா சிகிச்சை வசதிக்கு 10 நாட்களுக்கு முன்பாக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள மருத்துவ குழுக்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சிறந்த முறையில் கவனித்து கொண்டன.


latest tamil news



அத்துடன் மூதாட்டியும், வயதையும் பொருட்படுத்தாமல், மன உறுதியுடன், சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு முறையான ஒத்துழைப்பை வழங்கினார். இதன் பலனாக தற்போது 10 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்றிலிருந்து மீட்கப்பட்டார். தனது மாமியார் நோயில் இருந்து குணமடைந்ததில் அவரது மருமகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் சிகிச்சைக்குவெற்றிகரமாக பதிலளித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என மருத்துவமனையின் டாக்டர் ராகுல் குலே தெரிவித்தார். மூதாட்டியையும் பாராட்டினார். ஒரு நோயாளிக்கு அவர்களின் சேவைகளுக்கு 1 டாலர் வசூலிக்கும் 'ஒரு ரூபாய் கிளினிக்குகள்', மத்திய ரயில்வேயின் புறநகர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இவரை போன்ற நோயாளிகள் தொற்றில் இருந்து மீண்டு வந்தது, நம்மில் பலருக்கும் நம்பிக்கையையும், மன உறுதியையும் கொடுப்பதாக உள்ளது என பல தரப்புகளும் கூறுகின்றனர். தற்போது வரை, கல்யாண்-டோம்பிவ்லியில் 5,451 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். மேலும் 32,088 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X