அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா படை குவிப்பு: லடாக்கில் மூக்குடைபட்டதால் ஜிங்பிங் ஆத்திரம்

Updated : செப் 22, 2020 | Added : செப் 20, 2020 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: லடாக்கில் மூக்குடைபட்டதால், அருணாச்சல பிரதேசத்தில் படைகளை குவித்து, நம் ராணுவத்தை சீண்டுவதற்கு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்கு, நம் வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். சமீபகாலமாக, அண்டை நாடான சீனாவுக்கும், நமக்கும் எல்லை பகுதியில் மோதல் நீடித்து வருகிறது. ஜூனில், லடாக் அருகே,
China, India, LAC, அருணாச்சல பிரதேச, எல்லை, சீனா ,படை குவிப்பு

புதுடில்லி: லடாக்கில் மூக்குடைபட்டதால், அருணாச்சல பிரதேசத்தில் படைகளை குவித்து, நம் ராணுவத்தை சீண்டுவதற்கு, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சீனாவுக்கு பதிலடி கொடுப்பதற்கு, நம் வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

சமீபகாலமாக, அண்டை நாடான சீனாவுக்கும், நமக்கும் எல்லை பகுதியில் மோதல் நீடித்து வருகிறது. ஜூனில், லடாக் அருகே, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது; இதை, நம் வீரர்கள் முறியடித்தனர். அப்போது, சீன வீரர்கள் தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் பதற்றம் நிலவி, இரு நாடுகளும் படைகளை குவித்தன. போர் மூளும் சூழல் உருவானது.கூடுதல் வீரர்கள்


இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள், வெளியுறவு அமைச்சர்கள், ராணுவ அமைச்சர்கள் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து, சீன ராணுவம் உடனடியாக படைகளை வாபஸ் பெறும்படி, நம் தரப்பில் வலியுறுத்தப் பட்டது. ஆனாலும், லடாக் பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சதித் திட்டத்தை, நம் வீரர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.

லடாக்கில், சீன ராணுவத்துக்கு, நம் ராணுவம் தகுந்த பதிலடி கொடுப்பதால், சீனா, தன் வியூகத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

லடாக்கில் சீனாவின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதால், அந்த நாட்டு அதிபர் ஜிங்பிங் விரக்தி அடைந்துள்ளார். தன் வியூகத்தை மாற்றியுள்ள அவர், நம் நாட்டின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், எல்லை பகுதியில் சீன ராணுவத்தை களம் இறக்கியுள்ளார்.

சமீப காலமாக, அருணாச்சல பிரதேச எல்லையில், அசபிலா, லோங்ஜு, பிசா, மாஜா உள்ளிட்ட ஆறு இடங்களில் சீன ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், நம் எல்லையில் உள்ள வீரர்களை சீண்டும் நோக்கத்துடனும், அத்துமீறும் நோக்கத்துடனும் முகாமிட்டுள்ளனர்.

எல்லையை ஒட்டியுள்ள பிசா பகுதியில், புதிய சாலை அமைக்கும் பணியிலும் சீன வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.சீன ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, நம் வீரர்கள் தயாராக உள்ளனர். எல்லை யில் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளதுடன், கூடுதல் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.குள்ளநரித்தனம்ஏற்கனவே, அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை, தங்களுக்கு சொந்தமான இடங்கள் என, சீனா தெரிவித்து வருகிறது. இதற்கு நம் தரப்பிலிருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை, மேலும் மோசமாக்கும் வகையில், சீன வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம், நம் அதிகாரி கள், அமைச்சர்களுடன் எல்லையில் பதற்றத்தை தணிக்க அமைதி பேச்சு நடத்தும் சீனா, மற்றொரு பக்கம் எல்லையில் படைகளை குவிப்பது, அந்த நாட்டு அதிபரின் குள்ளநரித்தனத்தை அம்பலப்படுத்தி உள்ளது. இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.எல்லையோர மக்களுக்கு இலவச 'டெலிபோன் பூத்'


வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில், கிழக்கு கமோங் மாவட்டத்தில், மாகோ - சுனா என்ற கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடியினர் வசிக்கின்றனர். மலைப் பிரதேசம் என்பதால், இங்கு தகவல் தொடர்பு வசதி இல்லாமல் இருந்தது. இதனால், இங்குள்ள மக்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த கிராம மக்கள் வசதிக்காக, இந்திய ராணுவம், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப தரத்தில் இயங்கும் டெலிபோன் பூத்தை அமைத்துள்ளது. இந்த கிராம மக்கள், தங்கள் அவசர தேவைகளுக்கு, மற்ற பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் தங்கள் உறவினர்களை, இந்த டெலிபோன் வாயிலாக இனி தொடர்பு கொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-செப்-202015:47:18 IST Report Abuse
Saravanan முதல்ல நம் நாட்டில் உள்ள எதிரிகளை களை எடுங்கள் தைரியமாக கருத்து போடும் கை கூலிகளை பட்டினி போட்டு சாகடிக்கணும், அதை தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்ட வேண்டும் அப்பத்தான் இந்த ஜந்துக்கள் பயப்படும்
Rate this:
Cancel
Biil Brace - kandala,ஆப்கானிஸ்தான்
21-செப்-202013:39:38 IST Report Abuse
Biil Brace உண்ட வீட்டுக்கு வஞ்சகம் செய்தவன் பாவி
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-செப்-202011:45:44 IST Report Abuse
duruvasar மேஜர் ஜெனரல்... இதெல்லாம் உண்மைதானா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X