தமிழக காங்., தலைவர்கள் சோனியாவிற்கு கடிதம்

Updated : செப் 21, 2020 | Added : செப் 21, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Congress, Sonia, Sonia Gandhi, காங்கிரஸ்

புதுடில்லி: காங்., தலைவர் சோனியாவுக்கு, 23 காங்., தலைவர்கள் எழுதிய கடிதம், கட்சிக்குள் பெரும் பிரச்னையைக் கிளப்பியது. இதே போல இன்னொரு கடிதமும், காங்., தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். தமிழக சீனியர் காங் தலைவர்கள் சிலர், இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கட்சி வளர்ச்சி குறித்து, இந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளதாம்.இக்கடிதம் எழுதியவர்களுடன், காங்., சீனியர் தலைவர் குலாம் நபி ஆசாத் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறாராம். இவர் தான், முதல் கடிதம் எழுதியவர்களின் தலைவர். கட்சியில் தேர்தல் நடத்த வேண்டும் என பேட்டியும் கொடுத்தவர். இப்போது, இவரை சோனியா குடும்பத்தினர் கண்டு கொள்வதில்லை.


latest tamil news


குலாம் நபி ஆசாத், தமிழக காங்., தலைவர்களுடன் பேசுவதை, தமிழகத்தைச் சார்ந்த மூன்று இளம் எம்.பி.,க்கள் ராகுலிடம் போட்டுக் கொடுத்துவிட்டனர். இந்த மூவரும் ராகுலுக்கு நெருக்கமானவர்கள். தமிழக அரசியல் குறித்து, ராகுல், இவர்களிடம் தான் ஆலோசனை கேட்டு வருகிறார். கடிதம் எழுதிய தமிழக காங்., தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்த, எம்.பி.,க்கள் சொல்லி வருகிறார்களாம்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
21-செப்-202022:29:28 IST Report Abuse
sundarsvpr காங்கிரஸ் கட்சியில் மேலிடும் குழப்பத்திலுள்ளது. அங்கு சோனியாவா ராகுலா பிரயன்காவா என்ற பட்டி மன்றம் நடத்தும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கை சின்னத்தில் போட்டியிடுமா என்பது உறுதியான நிலையில் இல்லை. தமிழக அரசியலும் ஒரு கட்சி அமையுமா என்ற குழப்பத்தில் உள்ளது. கூட்டணி ஆட்சி அமைத்திட காங்கிரஸ் வலுவான கட்சி இல்லை. அண்ணா தி மு க வில் சசிகலா வருகையால் தினகரன் நிலை என்ன என்பது ஒரு சர்ச்சை கிளம்பலாம். தமிழகஅரசியலில் புயல் உள்ளது.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-செப்-202021:39:27 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டியவர் மாண்பமை நிதி நீதி நிர்வாகி சிதம்பரம். பிறகு மற்றவர்கள். இன்னும் காங்கிரஸ் நாட்டை ஆளனும்னு கனவுகாணுது . சிரிப்புதான் வருது.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
21-செப்-202011:43:24 IST Report Abuse
Balasubramanian Ramanathan என்ன அழகிரி அண்ணா இதெல்லாம். ஜோதி அக்காக்கு பதிலை ரெடி பண்ணிக்கிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X