கோவை:ஆன்லைன் மூலம் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் நிலையில், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களே இல்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக, இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இன்ஜி., மாணவர்களுக்கான தேர்வுகள் வரும், 24ம் தேதி முதல் துவங்க உள்ளது.இச்சூழலில், அண்ணா பல்கலை தேர்வு துறை, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு ஆய்வை மாநிலம் முழுவதும் நடத்தியுள்ளது.

இதில், இறுதியாண்டு படிக்கும் மாணவர்களில் எத்தனை பேரிடம் ஸ்மார்ட் போன் உள்ளது, எத்தனை மாணவர்கள் 'டேப்' பயன்படுத்துகின்றனர், கம்ப்யூட்டர் வசதி உள்ள மாணவர்கள் எத்தனை பேர் போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் முடிவில், ஆண்ட்ராய்டு மொபைல்போன் இல்லாத மாணவர்களே இல்லை என்ற விபரம் தெரியவந்துள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதன் காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை நடத்துவதற்கு, எந்தவித சிக்கலும் இருக்காது என்ற முடிவுக்கு, தேர்வு துறை வந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE