பயர் இன்ஜினியரிங் - பி.இ.,  உயிர் காக்கும் உயர் பணி!

Added : செப் 21, 2020 | |
Advertisement
கோவை : பி.இ., பயர் இன்ஜினியரிங் படிப்பவருக்கு அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் நிர்வாக மட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.தீ விபத்துக்கள் ஏற்படுவதையும், அதிலிருந்து பாதுகாக்கும் முறைகளை பற்றி படிப்பதும் தான் பயர் இன்ஜினியரிங். உயிர் பாதுகாப்பு உள்ள கட்டடங்கள், வசதிகளை உருவாக்கி தீ விபத்துக்களிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலின் ஒரு பிரிவே
 பயர் இன்ஜினியரிங் - பி.இ.,  உயிர் காக்கும் உயர் பணி!

கோவை : பி.இ., பயர் இன்ஜினியரிங் படிப்பவருக்கு அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் நிர்வாக மட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.
தீ விபத்துக்கள் ஏற்படுவதையும், அதிலிருந்து பாதுகாக்கும் முறைகளை பற்றி படிப்பதும் தான் பயர் இன்ஜினியரிங். உயிர் பாதுகாப்பு உள்ள கட்டடங்கள், வசதிகளை உருவாக்கி தீ விபத்துக்களிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலின் ஒரு பிரிவே பயர் இன்ஜினியரிங்.பல உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றும் படிப்பு என்பதால் பயர் இன்ஜினியரிங் படிப்பு அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது.
தீ விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது, தப்பிக்கும் முறைகளை கையாளுவது, சேதத்தை முடிந்த அளவு குறைப்பது பயர் இன்ஜினியர்களின் பணியாகும்.மூன்றரை ஆண்டுகளில் படிக்க கூடிய பி.இ., பயர் இன்ஜினியரிங் படிப்புகள் உள்ளன.இத்துறையில் சப்-ஆபிசர் பிரிவு படிப்புகள், சேப்டி அண்ட் பயர் இன்ஜினியரிங் பி.டெக்., படிப்புகள், 3 ஆண்டு பி.எஸ்சி., பயர் இன்ஜினியரிங் படிப்புகள் மற்றும் பயர்மேன் பயிற்சிப் படிப்புகள் உள்ளன.பி.இ., பயர் இன்ஜினியரிங் படிப்புக்கு பிளஸ் 2ல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு :
நல்ல தகவல் தொடர்பு திறன், நிர்வகிக்கும் திறன், பிரச்னைகளின் மையத்தில் விரைவாக முடிவெடுக்கும் திறன், பிரச்னைகளை தீர்க்கும் திறன் போன்றவை இப்படிப்புகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அடிப்படை தேவைகளாக உள்ளன. கல்வி தகுதியைத் தவிர, சிறப்பான உடற்தகுதியை பெற்றிருப்பது மிகவும் முக்கியம். அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் நிர்வாக மட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு தரப்படுகிறது.தீ தடுக்கும் நிறுவனங்களில் பல்வேறு பிரிவுகளில் பணி புரியலாம்.
பெட்ரோலிய கிணறுகள், எண்ணெய் சுத்திகரிப்பாலைகள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள், வேதிப் பொருட்களை தயாரிக்கும் ரசாயன கூடங்கள் போன்றவற்றில் வாய்ப்புகள் கிடைக்கும். விமான நிலையங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X