'அமெரிக்காவுடனான கூட்டணி தான் அமைதிக்கான அடித்தளம்': ஜப்பான் பிரதமர்

Updated : செப் 21, 2020 | Added : செப் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

டோக்கியோ: ஜப்பான் பிரதமராகப் பதவி வகித்து வந்த ஷின்சோ அபே, சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இரண்டு முறை மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்த நிலையில், ஷின்சோ அபே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.



latest tamil news



இதைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை கடந்த 1ம் தேதி கூட்டியது. இதைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹிடே சுகா வெற்றி பெற்று கடந்த 15ம் தேதி பிரதமராகப் பதவி ஏற்றார்.ஜப்பான் பிரதமராக யோஷிஹிடே சுகா பதவியேற்ற பின், முதல் முறையாக அமெரிக்கா - ஜப்பான் இரு நாடுகள் உறவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தொலைபேசியில் உரையாடினார்.


latest tamil news



இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் சுகா கூறுகையில், ''ஜப்பான் - அமெரிக்கக் கூட்டணி பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் அடித்தளம் என, டிரம்ப்பிடம் கூறினேன். தொடர்ந்து நெருக்கமாக, இணைந்து செயல்பட உள்ளோம். இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட ஒருங்கிணைந்து செயல்பட டிரம்ப்பும் ஒப்புக்கொண்டார்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
21-செப்-202018:57:14 IST Report Abuse
 Muruga Vel அமெரிக்காவில் ஜப்பான் கார்களுக்கு கிராக்கி அதிகம் ..பழைய கார் கூட உடனே விற்றுவிடும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X