சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 21, 2020
Share
Advertisement
உயரும் கடல் நீர்மட்டம்கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டு அளவில் தற்போதைய விகிதம் தொடர்ந்தால் 2100க்குள் கடல்நீர் மட்டம் 38 செ.மீ., உயரக்கூடும் என நாசா ஆய்வு தெரிவித்துள்ளது. அண்டார்டிகா, கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது கடல்நீர்மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது. இதில் அண்டார்டிகா பனியால் 30 செ.மீ., உயரமும், கிரீன்லாந்து பனியால் 8.9 செ.மீ., உயரமும் கடல்

உயரும் கடல் நீர்மட்டம்

கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டு அளவில் தற்போதைய விகிதம் தொடர்ந்தால் 2100க்குள் கடல்நீர் மட்டம் 38 செ.மீ., உயரக்கூடும் என நாசா ஆய்வு தெரிவித்துள்ளது. அண்டார்டிகா, கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது கடல்நீர்மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது. இதில் அண்டார்டிகா பனியால் 30 செ.மீ., உயரமும், கிரீன்லாந்து பனியால் 8.9 செ.மீ., உயரமும் கடல் நீர்மட்டம் உயரும் என ஆய்வு தெரிவிக்கிறது. பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டு அளவை குறைத்தால், கடல் நீர்மட்டம் உயர்வை குறைக்கலாம்.

*************


தகவல் சுரங்கம்



நம்பிக்கை தரும் 'ரோஸ்'

உலகில் புற்றுநோய் நோயாளிகளுக்கு தைரியம், நம்பிக்கை அளிக்கும் விதமாக செப்., 22ல் உலக ரோஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் அவர் களுக்கு 'ரோஸ்' வழங்கி அவர்களை மகிழ்விக்கலாம். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடாவின் 12 வயது மெலின்டா ரோஸ், சில வாரங்களே உயிரோடு இருப்பார் என டாக்டர்கள் தெரிவித்த நிலையில் ஆறு மாதங்கள் வாழ்ந்தார். இக்காலத்தில் அவர் மற்ற நோயாளிகள் உட்பட பலருக்கு கவிதை, இ-மெயில், கடிதம் எழுதினார். நோயாளிகளுக்கு சில நேரங்கள் ஒதுக்கி மகிழ்விக்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X