சென்னையில் மேலும் 805 பேர் கொரோனாவிலிருந்து நலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் மேலும் 805 பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : செப் 21, 2020 | Added : செப் 21, 2020
Share
சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,21) அதிகபட்சமாக சென்னையில் 805 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 982 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 648 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும், ஈரோடில் 201 பேருக்கும், திருப்பூரில் 161

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,21) அதிகபட்சமாக சென்னையில் 805 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.



latest tamil news



தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 982 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 648 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும், ஈரோடில் 201 பேருக்கும், திருப்பூரில் 161 பேருக்கும், கடலூரில் 153 பேருக்கும், தஞ்சாவூரில் 136 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 117 பேருக்கும், கொரோனா உறுதியாகியுள்ளது.


உயிரிழப்பு



இன்று சென்னையில் 16 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 6 பேரும், காஞ்சிபுரம், தஞ்சாவூர்,வேலுார்,தேனி தலா 4 பேரும், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 3 பேரும், திருச்சி, ஈரோடில் தலா 2 பேரும், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலுார்,திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்துார், திருவாரூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 60 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்


இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 805 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,43,680 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 531 பேரும், திருப்பூரில் 374 பேரும், சேலத்தில் 361 பேரும், கடலூரில் 255 பேரும், செங்கல்பட்டில் 245 பேரும், நாமக்கல்லில் 192 பேரும், திருவள்ளூரில் 188 பேரும், காஞ்சிபுரத்தில் 171 பேரும், நாகப்பட்டினத்தில் 149 பேரும், வேலூரில் 123 பேரும், கள்ளக்குறிச்சியில் 109 பேரும், கன்னியாகுமரியில் 103 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X