அமெரிக்காவுக்கு தண்ணீர்:மெக்சிகோ அதிபரை கண்டித்து போராட்டம்| Dinamalar

அமெரிக்காவுக்கு தண்ணீர்:மெக்சிகோ அதிபரை கண்டித்து போராட்டம்

Updated : செப் 21, 2020 | Added : செப் 21, 2020 | கருத்துகள் (6)
Share
டெலிசியாஸ்: மெக்சிகோ அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மெக்சிகோவில் உள்ள லா பொகுய்லா அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து டெலிசியாஸ் நகரில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1944 ம் ஆண்டு உடன்படிக்கையின் படி அமெரிக்காவுக்கு
மெக்சிகோ அணை, அமெரிக்கா, தண்ணீர், திறப்பு, எதிர்ப்பு, போராட்டம், mexico dam, america, water, release, protest.

டெலிசியாஸ்: மெக்சிகோ அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெக்சிகோவில் உள்ள லா பொகுய்லா அணையிலிருந்து அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து டெலிசியாஸ் நகரில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1944 ம் ஆண்டு உடன்படிக்கையின் படி அமெரிக்காவுக்கு மெக்சிகோ அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். அமெரிக்காவின் கொலராடோ ஆற்றிலிருந்தும் மெக்சிகோவுக்கு தண்ணீர் கிடைக்கும்.


latest tamil news



இந்நிலையில் அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ள மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவல் லோபெஜ் ஒப்ராடரை கண்டித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்ற வாரம் லா பொகுய்லா அணையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இச்சம்பவத்திற்கு பிறகும் உடன்படிக்கையின் படி அமெரிக்காவுக்கு தண்ணீர் திறக்க அந்நாட்டு அதிபர் ஆன்ட்ரெஸ் மேனுவல் உறுதியாக இருப்பதால் அதை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X