பொது செய்தி

இந்தியா

கர்நாடகா - மஹா இடையே செப்.,22 முதல் பஸ் போக்குவரத்து

Updated : செப் 21, 2020 | Added : செப் 21, 2020
Share
Advertisement
karnataka, maharashtra, bus service, starts, sep 22., கர்நாடகா, மஹாராஷ்டிரா, பஸ், போக்குவரத்து, துவக்கம்

பெங்களூரு: கர்நாடகா மஹாராஷ்டிரா இடையே செப்.,22 முதல் பஸ் போக்குவரத்து துவங்கும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் மஹா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பஸ் போக்குவரத்தினை செப்.,22 முதல் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பெங்களூரு, தேவனகிரே, மங்களூரு போன்ற பகுதிகளிலிருந்து வழக்கம் போல மஹா மாநிலத்திற்கு பஸ் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளின் போது ஆந்திராவுக்கும், கோவாவிற்கும் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டன.


latest tamil news



பஸ் பயணத்தின் போது பயணிகள் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். ஆன்லைன் வாயிலாகவும் பயணிகள் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X