பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : செப் 21, 2020
Share
Advertisement
  இதே நாளில் அன்று

செப்., 22, 1931

ஆந்திர மாநிலம், செகந்திராபாதில், 1931 செப்., 22ல் பிறந்தவர், அசோகமித்திரன்; இயற்பெயர், தியாகராஜன். 1952-ல், தந்தையின் மரணத்துக்குப் பின், சென்னையில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோவில், மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார்.தொடர்ந்து, எழுத்து உலகில் நுழைந்தார். 'டெக்கான் ஹெரால்டு, இல்லஸ்ரேட்டட் வீக்லி' உள்ளிட்ட பத்திரிகைகளில், கட்டுரை எழுதினார். 'கணையாழி' இதழில், 25 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 250 சிறுகதைகள் உட்பட, ஏராளமான கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு என, எழுத்துத் துறையில் சுழன்றார்.
இவரது படைப்புகள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'அப்பாவின் சிநேகிதர்' தொகுப்புக்காக, 1996-ல், 'சாகித்ய அகாடமி' விருது பெற்றார். தமிழக அரசின், திரு.வி.க., விருது, சாரல், இலக்கியச் சிந்தனை உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2017 மார்ச், 23ல், தன், 86வது வயதில் காலமானார்.எழுத்தாளர் அசோகமித்திரன் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X