தமிழ் வளர்ச்சித்துறை பேரை சொல்லி வசூல் பண்றாங்கோ

Added : செப் 21, 2020
Advertisement
''தமிழ் வளர்ச்சித்துறை பேரை சொல்லி வசூல் பண்றாங்கோ,'' தண்டோரா போடாத குறையாக, மித்ரா சத்தம் போட்டதும், ''ஏய், மித்து. மெதுவா பேசுடி,'' அதட்டினாள் சித்ரா.''ெஹட்செட் இருக்கறதால், கத்திட்டேன்,'' சொன்ன மித்ரா, சுடச்சுட டீ கொடுத்தாள்.''ஆமா... என்னமோ சொன்னியே!''''கடைகளில் பெயர் பலகை தமிழில் இருக்கணும்னு, தமிழ் வளர்ச்சித்துறையினர், கடைகளுக்கு 'நோட்டீஸ்'
தமிழ் வளர்ச்சித்துறை பேரை சொல்லி வசூல் பண்றாங்கோ

''தமிழ் வளர்ச்சித்துறை பேரை சொல்லி வசூல் பண்றாங்கோ,'' தண்டோரா போடாத குறையாக, மித்ரா சத்தம் போட்டதும், ''ஏய், மித்து. மெதுவா பேசுடி,'' அதட்டினாள் சித்ரா.''ெஹட்செட் இருக்கறதால், கத்திட்டேன்,'' சொன்ன மித்ரா, சுடச்சுட டீ கொடுத்தாள்.''ஆமா... என்னமோ சொன்னியே!''''கடைகளில் பெயர் பலகை தமிழில் இருக்கணும்னு, தமிழ் வளர்ச்சித்துறையினர், கடைகளுக்கு 'நோட்டீஸ்' கொடுத்துட்டு இருக்காங்க. அப்படியே, 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும் 'பைன்' கட்டணும்னு சொல்லியிருக்காங்க...''''உடனே, சில கடைக்காரங்க, 'ஐ.டி.,' கார்டு காட்டுங்க. அதுக்கு அப்புறமா 'பைன்' கட்றோம்,'னு சொன்னதும், 'கார்டு இல்லாம வந்துட்டோம்,' சுதாரிச்சுட்டாங்க. ஆனா, 'ஐ.டி.,' இருந்தா மட்டும் வாங்க... இல்லைனா போலீசுல பிடிச்சு கொடுத்துடுவோம்,'னு 'வார்னிங்' பண்ணியிருக்காங்க,''''அதைக்கேட்டதும், தமிழ் வளர்ச்சித்துறைங்கற பேர்ல போனவங்க, 'நைசா' எஸ்கேப் ஆயிட்டாங்களாம். இதை தெரிஞ்சுகிட்ட ைஹயர் அபிஷியல்ஸ், என்கொயரி பண்றாங்களாம்,''''என்னடி இது, தமிழுக்கு வந்த சோதனை'' சிரித்த சித்ரா, ''இதே மாதிரி தாசில்தாருக்கு வந்த சோதனை தெரியுமா?'' என கேட்டாள்.''தெரியாது, சொல்லுங்க...''''தாராபுரம் பக்கத்தில, பெரமியம் கிராமத்தில், அனுமதியின்றி சிலர் தண்ணீர் குழாய் பதித்துள்ளனர். இதனால, தாசில்தார் தடுத்து பார்த்தார். ஆனா, அவரின் ஆபீசிலயே அவருக்கு எக்கச்சக்க எதிர்ப்பு. இதனால, என்னை வேலை செய்ய விடமாட்டீங்கறாங்க; வேற பக்கம் மாத்திடுங்க'னு கலெக்டருக்கு, லெட்டர் கொடுத்தாரு,'''' உடனே, 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க. அவர் போனதும், குழாய் பதிக்கும் பணியை, இரவோடு இரவா முடிச்சுட்டாங்களாம். தாலுகா தலைமையிடத்துல இருக்கற ஒரு அதிகாரியின் முழு ஒத்துழைப்போட, இந்த வேலையை செஞ்சு முடிச்சுருக்காங்க. பெரமியம் காட்டுல, ஒரே பண மழைதானாம்...'' என்றாள் சித்ரா.அப்போது, 'டிவி'யில், 'ராஜேந்திர பூபதி எழுதிய 'பணம் சம்பாதிப்பது எப்படி?' நிதி தொடர், இன்று மாலை, 5:00 மணிக்கு,' என அறிவிப்பு வெளியானது.அதைப்பார்த்து சிரித்த மித்ரா, ''இப்படி நெறைய பேர் கெளம்பிட்டாங்க,'' என்று சொல்லி, ''கொரோனா பேரை சொல்லி கொள்ளையடிக்கிறாங்களாம்,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.''யாருங்க்கா, எப்படி?''''மித்து, தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் வீடுகளில் கார்ப்ரேஷன் சுகாதார பிரிவினர் கிருமிநாசினி தெளித்தல், தனிமைப்படுத்திய வீடு, பேனர், தகர ெஷட் அமைத்தல் என வேலை செய்கின்றனர். இதையெல்லாம் செஞ்சுட்டு, சம்பந்தப்பட்ட வீட்டு ஓனரிடமே, ஆயிரக்கணக்கில் பணம் வசூல் பண்ணிடறாங்களாம்,''''ஏற்கனவே, நோய் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் போது, எரியற வீட்டில் எடுக்கற மாதிரி, பணத்தை வாங்கறாங்கன்னு, பலரும் பேசுறாங்களாம். ஆனா, இத கண்டுக்க வேண்டிய கார்ப்ரேஷன் அதிகாரி, வழக்கம்போல, குறட்டை விடறார்,''''அக்கா, திருடறவங்க திருடிட்டுத்தான் இருப்பாங்க போல,'' சொன்ன மித்ரா, ''போலி ரூபா நோட்டு கொடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க,'' அவிநாசி மேட்டர் பேசினாள்.''ஆமா... அதிலென்ன டெவலப்மென்ட்?''''அந்த வழக்கோட மூளையா செயல்பட்ட 'நோமன்'கிற ஒருத்தரையும் கண்டுபிடிச்சு, அரெஸ்ட் பண்ண பார்த்திருக்காங்க. ஆனா, போலீஸ் திடீர்னு பின்வாங்கிட்டாங்களாம். என்ன பிரசர்னு தெரியலக்கா,''''வேறென்ன, வழக்கம் போல பாலிடிக்ஸ்தான் இருக்கும். மித்து, அதே ஊரில, கவர்மென்ட் வேல வாங்கித்தர்றேன்னு சொல்லி, 15 லட்சம் ரூபாய் வரை லவட்டிய பலே கில்லாடியை பிடிச்சுட்டாங்க,''''ஆனா, அவருக்கு நெருங்கிய நண்பரா, இருந்த ஒருத்தரை கண்டுக்காம விட்டுட்டாங்க. இன்னும் 'டீப்'பா, விசாரிச்சா பல திடுக்கிடும் உண்மை வெளிவரும்,''''விசாரிச்சாதானே,''''அதுவும் கரெக்ட்தான்டி. இந்த தாராபுரம், ஒரத்துப்பாளையத்தில மணல் திருடறது ஜாஸ்தியாயிடுச்சாம். அதிலயும், கிராம அதிகாரிக்கு 'லகரங்களை' குடுத்து சரிக்கட்டி, விடியவிடிய மணல் திருட்டு ஜோரா நடக்குதாம்,''''திருடற மணலை, உள்ளூர் ஆசாமி ஒருவர் தோட்டத்தில் கொட்டி வைத்து போலி பில் தயாரித்து, விக்கறாங்களாம். கனிமவளத்துறையையும் கவனிக்கிறதால, மணல் கடத்தல் ஒஹோன்னு நடக்குது,''அப்போது, ''அடடே... நந்த கோபால் பெரியப்பா, நல்லாயிருக்கீங்களா? ஒரு கோடி போட்டு, பங்களா கட்றீங்களாம், சொல்லவே இல்ல,'' பேசி விட்டு மொபைல் போனை அணைத்தாள் மித்ரா.உள்ளே வந்த மித்ராவின் அம்மா, 'ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. பக்கத்து தெரு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்,' என சொல்லி கிளம்பினார்.''மித்து, தெற்கு மகளிர் ஸ்டேஷனில் லேடி கொடுத்த புகாரை, முறையா விசாரிக்காம வாலிபர் மீது எப்.ஐ.ஆர்., போட்டுட்டாங்க. தலைமறைவாக உள்ள அவரை தேடுறதை விட்டுட்டு, குடும்பத்தை கூட்டிட்டு வந்து, 'டார்ச்சர்' பண்ணியிருக்காங்க,''''இதை தாங்க முடியாம, வாலிபரோட அம்மா, தற்கொலை முயற்சி செஞ்சு, ஜி.எச்.,-ல் இருக்காங்க. இதனால, அதிர்ச்சியான போலீஸ்காரங்க, தற்கொலை முயற்சிக்கு காரணம், மகன் மேல கேஸ் கொடுத்த பெண்தான் காரணம்னு, எழுதி, கையெழுத்து வாங்கிட்டாங்களாம்,''''என்னக்கா, இது கொடுமையா இருக்கு?''''இது பரவாயில்லடி. மூலனுாரில் இடப்பிரச்னை தொடர்பாக 'ஜெய'மான அதிகாரியிடம் ஒருத்தரு புகார் கொடுத்தார். முறையாக விசாரிக்காம, ஒருதரப்புக்கு சாதகமாக நடந்துட்டு, 'மேட்டரை' வாங்கிட்டு, சும்மா ஜம்முனு இருக்காரு,''''ஒரு தரப்பை விசாரிக்க கூப்பிட்டுட்டு, எதிர்தரப்பை, சம்பந்தப்பட்ட இடத்தில் வேலியை போட வச்சு இருக்காரு. ஆக மொத்தத்தில், 'சிவில்' புகாரை தேவையில்லாம விசாரிச்சு, தன்னோட தேவையை கச்சிதமாக பூர்த்தி பண்ணியிருக்கார்,''''மாவட்ட வி.ஐ.பி., ஆசியோட, அவர் இப்டித்தான் பண்றாரு. உயரதிகாரி கண்டுக்கிட்டா பரவாயில்லைதான். அக்கா, இதேபோல, குளத்தை பேரில் கொண்ட ஊரிலுள்ள ஒரு குட்டி அதிகாரி, தனக்கு தெரிந்தவர் மூலம், 'டிபார்ட்மென்ட்' பத்தி சமூக வலைதளங்களில் எழுத சொல்லறதை வாடிக்கையாக வச்சிருக்கார்,''''இதபத்தி தெரிஞ்ச மேலதிகாரிங்க, சமீபத்தில் விசாரிச்சப்ப, 'என்ன ஏதாவது தொந்தரவு செஞ்சீங்கன்னா, லெட்டர் எழுதி வச்சுட்டு செத்துடுவேன்,' ஓபனா, மிரட்டினாராம். இதனால, அவங்களை பாத்தாலே மத்தவங்க தெறிச்சு ஓடறாங்களாம்,''''இப்பல்லாம், இந்த மாதிரி 'டெக்னிக்'ஐ யூஸ் பண்றாங்க'' என்ற சித்ரா, ''பத்து இடத்துக்கு, லகரங்களில் பேரம் நடக்குதாம்,'' என, புதிர்போட்டாள்.''அடேங்கப்பா... எந்த ஆபீசில்?''''கார்ப்ரேஷனில் பத்து காலிப்பணியிடத்துக்கு இன்டர்வியூ நடந்தது. இடத்தை நிரப்ப ஆளும்கட்சிகாரங்க, அதிகாரிங்க பேரம் நல்லாவே பேசறாங்க. ஒரு இடத்துக்கு, 10 முதல், 15 லகரம் வரை ரேட் பிக்ஸ் பண்ணியிருக்காங்க. கொரோனா காலத்திலும், வசூல் சும்மா கொளுத்துதுடி,''''அக்கா... இதேபோல, ஊட்டியிலிருந்த வந்த அதிகாரி, செம கலெக் ஷன் பாத்துட்டு போயிட்டாராம்,''''அப்படியா, யாருடி அது?''''நீலகிரி 'டாஸ்மாக்' அதிகாரி ஒருத்தர், காங்கயம் தாலுகாவிலுள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் விதிமீறல் இருக்கான்னு, எஸ்.ஆர்.எம்., ஆர்டரின் பேரில், ஆய்வு செய்தார். பேருக்கு சில கடைகளில் மீது நடவடிக்கை எடுத்தார். அப்புறம் மீதமுள்ள கடைக்கு, 10 முதல், 15 ஆயிரம் வரை 'சேகரம்' பண்ணிட்டு, மலை ஏறிட்டாராம்,''''ஏதோ, வந்த வரைக்கும் பரவாயில்லைன்னு சுருட்டிட்டாரு போல. மித்து, தலைவலிக்குது. சூடா ஒரு இஞ்சி டீ போடு,'' என்றதும், மித்ரா சமையலறை நோக்கி சென்றாள். வெளியே மழை துளிர்க்க ஆரம்பித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X