அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிறையில் சசிகலாவை சந்திக்க சைக்கிளில் செல்லும் தொண்டர்

Added : செப் 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஓசூர் : பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை காண, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, அ.ம.மு.க., தொண்டர், சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார். சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மாங்குட்டை பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல், 50; அ.ம.மு.க.,வின், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணைத்

ஓசூர் : பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை காண, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, அ.ம.மு.க., தொண்டர், சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.



சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சசிகலா அடைக்கப்பட்டு உள்ளார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த மாங்குட்டை பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல், 50; அ.ம.மு.க.,வின், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணைத் தலைவர். இவர், சசிகலாவை காண, திருச்செங்கோட்டில், கடந்த, 18ல் சைக்கிள் பயணத்தை துவங்கினார்.நாள்தோறும் அதிக பட்சம், 45 கி.மீ., பயணம் செய்யும் வடிவேல், தமிழக எல்லையான ஓசூருக்கு, நேற்று மதியம் வந்தார்.



வடிவேல் கூறுகையில், ''சசிகலாவை சந்திக்க, அனுமதி கேட்டு, சிறை நிர்வாகத்திடம் கடிதம் வழங்குவேன். அனுமதி கிடைத்தால், அவரிடம், தாங்கள் வந்தால் தான் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும். மக்களை, தங்களை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிப்பேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
22-செப்-202011:44:28 IST Report Abuse
Dr. Suriya இப்படியும் ஒரு கிறுக்கு........
Rate this:
Cancel
Thomas - Al Khor,கத்தார்
22-செப்-202009:34:49 IST Report Abuse
Thomas இந்த மாதிரிகளை என்ன செய்ய
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
22-செப்-202008:34:52 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பாவம். வீணான முயற்சி. சசிகலா வந்து ஏதும் செய்யப்போவதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X