பொது செய்தி

தமிழ்நாடு

'2 மாதங்களில் தமிழகம் பழைய நிலைக்கு திரும்பும்'

Updated : செப் 23, 2020 | Added : செப் 21, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: ''இரண்டு மாதங்களில் தமிழகம் பழைய நிலைக்கு திரும்புவோம். பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான பரிந்துரைகளை வழங்கி உள்ளோம்'' என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தெரிவித்தார்.கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக தமிழக
TN, TamilNadu CM, EPS

சென்னை: ''இரண்டு மாதங்களில் தமிழகம் பழைய நிலைக்கு திரும்புவோம். பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான பரிந்துரைகளை வழங்கி உள்ளோம்'' என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.இக்குழு சார்பில் அதன் தலைவர் ரங்கராஜன் நேற்று முதல்வர் பழனிசாமியிடம் 2௫௦ பக்க அறிக்கை சமர்பித்தார். அதன்பின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அறிக்கை அளித்த பின் ரங்கராஜன் அளித்த பேட்டி: கொரோனா பாதிப்பினால் பொருளாதார நிலை மந்தம் அடைந்துள்ளது. 2020 -- 21ல் வளர்ச்சி 1.71 சதவீதமாக இருக்கும் என்றும், மற்றொரு கணிப்பில் சரிவு சிறிது இருக்கலாம் என தெரிகிறது.ஜி.எஸ்.டி. வருவாய், பெட்ரோல், டீசல் வரி, மின் உபயோகம் ஆகியவற்றை பார்க்கும் போது இரு மாதங்களில் பழைய நிலைக்கு திரும்புவோம்.நாங்கள் அளித்த பரிந்துரைகளை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். ஒரு பகுதி நிவாரணம் புதுப்பித்தல் தொடர்பானது. குறுகிய காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ளோம். உதாரணமாக நவம்பர் மாதம் வரை அரிசி கொடுப்பதை மேலும் நீட்டிக்க சொல்லி உள்ளோம்.
கட்டுமான தொழிலாளர்கள் நிதியில் உள்ள 3200 கோடி ரூபாயை உடனடியாக செலவழிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

அரசு செலவு செய்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தொழில் பூங்காக்கள் தொழில் நகரம் உருவாக்கி அதில் ஒரு பங்கை சிறு தொழிலுக்கு கொடுக்க வேண்டும். நீண்ட கால நோக்கில் என்ன செய்ய வேண்டும் என்பது இரண்டாவது பகுதி. அதில் பல ஆண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


அறிக்கை மீது உரிய நடவடிக்கை: முதல்வர் உறுதிதமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் நேற்று முதல்வரிடம் சமர்பித்தார்.
அப்போது அவரது குழுவினருடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:அறிக்கை அளித்த குழு தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் நன்றி.கொரோனா ஒரு புதிய நோய். உலகமே அச்சத்தில் இருக்கும் நிலையில் தமிழகம் வளர்ச்சி பாதையை அடைய வேண்டும். வளர்ச்சியை நோக்கி செல்ல என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களை உள்ளடக்கி சுருக்கமான கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள்.

அவற்றை அரசு உரிய முறையில் பரிசீலிக்கும். குழு பரிந்துரைத்த விஷயங்களை உன்னிப்பாக ஆராய்ந்து தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பாடு அடையவும் வளர்ச்சி நோக்கி செல்லவும் உங்கள் கருத்துக்களை அரசு கவனமாக எடுத்துக் கொள்ளும்.கொரோனா நோய் தொற்றுள்ள சோதனையான காலத்தில் அரசுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு சொந்த பணிகளை விட்டு அரசுக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
22-செப்-202015:50:14 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் உற்பத்தியாளர்கள் என்ன விலை நிர்ணயித்திருந்தாரோ அதே விலைக்குத்தான் வாங்கினேன். ஆனால், விவசாயிகள் பொருளை வாங்குபவரோடு அமர்ந்து பேசி தாங்கள் உழைத்து உற்பத்தி செய்த வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று இந்த மசோதா சொல்கிறது. விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்சினை. இது விவசாயிகளை அவமானப்படுத்தும் செயலாகும். இந்தச் சட்டமே விவாயிகளை அவமானப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டம் என்றே சொல்வேன்.
Rate this:
Cancel
22-செப்-202012:11:36 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஒருத்தன் பாரத போர் என்று கதை , கடைசியில் ACT OFGOD என்று இயலாமையை சொல்லிவிட்டான் இவர் 3 நாளில் வாதம் செய்வேன் என்கிறார் இன்று இப்படி இவர்கள் சொல்லுவதை பன்னீரில் எழுதி வையுங்கள்
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
22-செப்-202010:12:34 IST Report Abuse
Balasubramanian Ramanathan வுட் மாட்டோம். முதல்கட்ட நடவடிக்கைத்தான் 28 ந்தேதி போராட்டம். இப்படி பல போராட்டங்கள் தொடரும். தமிழர்களின் உரிமைகளை பறிக்க விடமாட்டோம். மோடி ஒழிக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X