பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணிக்கு தயாராகுங்க! பாசறையினருக்கு அழைப்பு

Added : செப் 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், 'பூத் கமிட்டி' உறுப்பினர் நியமன பணி நடந்து வருகிறது. கட்சி மட்டுமல்லாது, சார்பு அணிகளும், 'பூத் கமிட்டி' அமைப்பு பணியில் இறங்கியுள்ளன.மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், 'பூத் கமிட்டி' அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். பாசறை மாவட்ட

திருப்பூர்:திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், 'பூத் கமிட்டி' உறுப்பினர் நியமன பணி நடந்து வருகிறது. கட்சி மட்டுமல்லாது, சார்பு அணிகளும், 'பூத் கமிட்டி' அமைப்பு பணியில் இறங்கியுள்ளன.மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், 'பூத் கமிட்டி' அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன் வரவேற்றார். எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் மண்டல தலைவர்கள் பங்கேற்றனர்.எதிர்வரும் சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். 'பூத் கமிட்டி'யினர் முழு நேர தேர்தல் பணிக்கு தயாராக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.மாலையில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியை சேர்ந்த, 100க்கும் அதிகமானவர்கள், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X